துருவ நட்சத்திரத்தின் சக்தியை இடமறித்து அதன் சக்திகளைப் பெறுதல் வேண்டும்
நமது நாட்டில்
முதன் முதலில் தோன்றிய மனிதன் அகஸ்தியன் அண்டத்தின் உணர்வினைப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) இயக்கத்தின் உணர்வை
அறிந்துணர்ந்தவன்.
1.அகஸ்தியன்
கண்டறிந்த உணர்வின் வழிப்படி
2.பின் வந்த ஞானிகளும் மகரிஷிகளும் அதைத் தொடர்ந்து வழி நடத்தி வந்தனர்.
ஆனால் கால
வெள்ளத்தால் அரசர்கள் மதம் இனம் மொழி என்ற நிலைகளில் அவரவர்களுக்கொப்ப மதங்களை வகுத்து… அதற்குச் சட்டங்களை இயற்றி அதன் வழியில் பல விதமான மதங்களையும் இனங்களையும்
உருவாக்கி விட்டார்கள்.
அதன் வழி தான்
இப்பொழுது நாமும் அரசர்கள் காட்டிய வழியில் வழி நடத்தி வருகின்றோம். ஞானிகளும் மகரிஷிகளும் கூறிய இந்த உணர்வுள் கால
வெள்ளத்தால் மறைந்தே போய் விட்டது.
அரசர்களின்
ஆசையின் நிமித்தம் போர்
முறைகள் ஏற்படப்பட்டு மதங்களை உருவாக்கி மதத்திற்கு மதம் என்ற
போர்முறையை வைத்து மதத்திற்குள் இனம் என்று இனத்தின் நிலைகள்
கொண்டு போர்முறையாகி “மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள்
முழுமையாக மறைந்து விட்டது என்றே சொல்லலாம்…”
ஆனால் குருநாதர்
காட்டிய அருள் வழியில் நாமும் ஒரு மதம் தான்…!
1.பிறவா
நிலை என்ற (மதம்)… இந்த உலகப் பற்றை
விட்டு
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”
ஆனால் “உயிர்
ஒளியால் உணரப்பட்ட…” உணர்வின் தன்மை ஒளியாக மாற்றப்படும்
பொழுது
1.அதாவது
“உயிருடன் ஒன்றிய சேர்க்கை… ஒளி…!”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்
அப்படி மகரிஷிகளான நிலைகளில்
நமது குருநாதர் காட்டிய நெறியைப் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். ஏனென்றால் விண்ணுலக ஆற்றல் மண்ணுலகில் வந்து… மனிதனான பின் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கண்டான்.
1.குருநாதர் ஆரம்பத்தில்
இதையெல்லாம் என்னுள் இணைத்தார்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.
அணுவின் ஆற்றலைத் தனக்குள்
உணர்ந்து அணுவின் வளர்ச்சியின் தன்மையும் உணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி
அதை வலு சேர்க்கின்றார் அகஸ்தியர்.
நமது பூமி விண்ணிலிருந்து
வருவதைத் தனக்குள் ஈர்க்கும் போது அதை இடைமறித்து அந்த உணர்வை நுகர்ந்து அதனின் வலுவை
பெறுகின்றான் அகஸ்தியன்.
1.அதனால்தான் அதிகாலையில்
துருவ நட்சத்திரத்தைக் கொஞ்சம் உங்களை இடைமறிக்கும்படி சொல்லி
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.
2.பின் வந்த ஞானிகளும் மகரிஷிகளும் அதைத் தொடர்ந்து வழி நடத்தி வந்தனர்.
2.இந்த உடலின் பற்றை விட்டு… உயிரின் பற்றுடன் சென்றவர்கள் ஞானிகள்
3.மனிதர்களான நாம் உடல் பற்று… உயிரின் இயக்கம்…! எண்ணத்தை உயிரில் உணர்வாக இழுக்கப்பட்டு “உடலின் சேர்க்கை…”
2.அவ்வாறு ஓளியாக ஆனவர்கள் மகரிஷிகள்
2.நான் (ஞானகுரு) உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.
2.அதனின் ஆற்றலை உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.