பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்ல உனக்காகக் காத்திருக்கின்றேன்
பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!
ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
2.மாயத் தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” - ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”
கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”
1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.
பயன் கொள்ளுங்களப்பா…!