ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 11, 2025

கோபமும்… இரத்தக் கொதிப்பும்

கோபமும்… இரத்தக் கொதிப்பும்


சந்தர்ப்பத்திலே கோப உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வளர்ந்தால் கார குணத்தின் இனத்தை அது விருத்தி செய்து கொண்டே இருக்கும்.
 
ஒரு அணுவிற்கு ரத்தத்தில் அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது… அது பல அணுக்களாகப் பெருகி விட்டால்
1.பல அணுக்களும் அந்தக் கார உணர்ச்சிகளை உணவாக உட்கொண்டால் என்ன செய்யும்…?
2.அது போன்று வளர்ச்சி பெற்றவர்களுக்குக் கோபம் அதிகமாக வருவதைப் பார்க்கலாம் வேகமாக வரும்
3.நரம்புகள் எல்லாம் அவர்களுக்குப் புடைத்து விடும்
4.அவர்கள் நரம்பைப் புடைக்க வைக்கின்றார்களா இந்த உணர்ச்சிகள் ரத்த நாளங்களில் அவ்வாறு இயக்குகின்றதா…?
5.கண்கள் எல்லாம் சிவந்து விடும் லை கும்… என்று ஆகிவிடும்
6.நெற்றியில் கண்ணுக்கு வரக்கூடிய ரத்த ஓட்டங்களில் வேகமாக இருப்பதைக் காணலாம்.
 
தவறு யார் செய்தது…?
 
கோபப்படுவோரை வேடிக்கை தான் பார்த்தோம் அந்த உணர்வுகள் அணுவாக விளைகிறது. அந்த அணுக்கள் பெருகும் பொழுது அதனுடைய மம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது இந்த உணர்வின் வேகம் உயிரிலே இயக்குகிறது.
 
எப்படி…?
 
டி.வி ரேடியோக்களில் ட்ரான்ஷாக்ஷன் என்று சொல்வார்கள். இந்த உணர்வின் தன்மை அது எந்த உணர்ச்சியோ “ட்ரான்ஷாக்ஷன்…” அதை எடுத்து இந்த உணர்வுகளை மூளை பாகம் வரை சிந்திக்கச் செய்து உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
1.நுண்ணிய நரம்புகளில் கார உணர்ச்சிகள் ஆகிப் பலூன் மாதிரி ப்பிவிடும்.
2.நம்மை அறியாதபடியே தலை கிண் என்று ஆகிவிடும் கண்களும் அப்படியே ஆகும்.
 
குழந்தை மீது பாசமாக நாம் இருந்தாலும் அந்த நேரத்தில் அவன் எதையாவது கீழே போட்டான் என்றால் அறிவு கெட்டதனமாகச் சாமானைப் போடுகிறான் பார்…” என்று கோபம் வரும்.
 
தன் மனைவியைக் கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னால் சரி எடுத்து வரலாம் என்று சாதாரணமாக அவர்கள் நடந்தால் நடப்பதைப் பார் நீ என்ன வேலை செய்கின்றாய்…?” என்று அவர்கள் மீதும் வெறுப்பு வரும்.
 
தொழில் செய்யும் இடங்களில் பார்த்தோம் என்றால் வேலை பார்க்கும் பையனிடம் ஒரு வேலையைச் சொல்லி இந்த பைலைக் கொண்டு போய் இன்னாரிடம் கொடுத்து வா…” என்று சொன்னால் சரிங்க சார்…! என்று சாந்தமாகச் சென்றால்
1.அவன் போகும் பொழுது நடையைப் பார் இவனெல்லாம் உருப்படுவானா…? எப்படி வேலை செய்கின்றான் பார்…! என்று
2.நம்மை அறியாமல் அவனைத் திட்டுவோம்..
 
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்…! அவனிடம் இதைச் சொன்ன பின் காதிலே கேட்கின்றான் கேட்டபின் அதே உணர்வின் தன்மை என்ன இப்படிக் கோபிக்கின்றார்…?” என்று கோபத்துடன் செல்வான்.
 
இந்த உணர்வோடு செல்லும் பொழுது யாரிடம் அந்த பைலைக் கொடுக்க வேண்டுமா அவரிடம் கொடுக்காத படி வேறொருவரிடத்தில் கொடுத்து விடுவான். பைலைக் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிடுவான்.
 
ஆனால் ஆனால் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அங்கே சேர்ந்திருக்காது. அவரிடம் பெல் அடித்து பைல் வந்து சேர்ந்ததா என்று கேட்டோம் என்றால் இல்லை வரவில்லை என்பார்.
 
அந்த பையனைக் கூப்பிட்டு உன்னை எங்கேடா நான் கொடுக்கச் சொன்னேன் எங்கேடா கொடுத்தாய்…?” என்று சண்டை வரும்.
 
ஏனென்றால் இந்த உணர்வுகள்
1.இவர் உணர்வு தான் அந்தப் பையனை இயக்குகின்றது.
2.அதன்படி அவன் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகின்றது.
 
குற்றம் யார் செய்தது…? து தான் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்…! நம் உணர்வுகளை அது இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.
 
அப்போது தவறு யார் செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது. நுகர்ந்தது அணுவின் கருக்களாகப் பெருகி அது வளர்ச்சி அடைந்த பின் நமக்குக் கோபம் அதிகமாக வருகின்றது...”
 
உணவு சாப்பிடுவதற்காக மனைவி சாப்பாடு கொண்டு வருகிறார்கள் என்றால் அதைப் பார்த்த உடனே உணர்ச்சிகள் ஆவேசம் வரும். கொண்டு வரும் பொழுது இடையிலே சிறிது நின்றால் போதும்.
 
ஏன் இப்படிக் கொண்டு வந்து வைக்க வேண்டியதுதானே அதற்குள் என்ன…? என்று தன்னாலே மனைவியிடம் சண்டை வரும்.
1.இது மாதிரி நிறைய ஆன பின் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
2.அடுத்து எதைப் பார்த்தாலும் ந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.
3.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்ஷன் செய்யக் கூடிய அதிர்வுகளை உருவாக்கும் இடத்திலே பலூன் மாதிரி ப்பி விடும்.
 
அது நுரையீரல் பக்கம் சென்றால் அங்கே விரிவடைந்து மூச்சுத் திணறல் அதிகமாகிவிடும் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது மனிதனை ஆபத்திற்குள் கொண்டு போய் விட்டு விடும்.
 
அதே சமயத்தில் கை பாகம் இயக்கப்படும் பொழுது ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் வரும் போது அதனுடைய அழுத்தமானால் ஒரு பக்கம் இருக்கும் கை காலிலே செயலிழந்து விடும். “டபக்” என்று இழுத்துச் சுண்டிவிடும்.
 
ஏனென்றால் அதற்குச் செல்ல வேண்டிய உணர்வின் உணர்ச்சிகளைத் தடைப்படுத்தி விடுகின்றது பலூன் மாதிரி அந்த இடத்தில் உப்பிக் கை கால்கள் சுருங்கி விட்டால் அப்புறம் அதற்கு வேண்டிய வைத்தியங்களைத்தான் பார்க்க வேண்டி வரும்.
 
ஆனால் பலூன் மாதிரி ப்பியது வெடித்து விட்டால் “இரத்தக் கொதிப்பு வந்தது இறந்துவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.
 
இதை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்… வழி வேண்டுமல்லவா…!