ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2025

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!


மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவைபானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்
 
(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”
 
குயக்கலத்தின் சிறப்பைசெயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?
 
குரல் - உடல் என்றும்குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.
 
குயக்கம் போல்
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகிமுகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகிமாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.
 
சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?
 
சகல ஜீவன்களும்ஜீவ ஆதார வித்துக்களும்உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலிஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.
 
ஆகஎண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!
 
1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்டமறைந்து போனஉண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.
 
குணங்களின் செயல் வளர்க்கின்ற தன்மைகளில் மனத்தின் கருவே வித்தாகசகல ஜீவராசிகளும் உலகோதய நடைமுறை மனித மனத்தில் உண்டு.