ஸ்ரீனிவாச அவதாரம்
கொங்கண முனி தன் அவதாரம் ஸ்ரீனிவாசனுள் செயற்பட்ட அன்றைய தினம் என்றும்
போல் புலர… மாடுகள் மேய்க்கும் சிறுவர்களுடன் மாட்டை
ஓட்டிச் செல்லும் ஸ்ரீனிவாசனும் அம்மையிடம் அன்றும் ஆசி பெற்று… மகிழ்வுடன் சென்று கொங்கணர் புற்றருகே விளையாடினான்.
மாடுகள் அன்று தறிகெட்டு ஓடும் நிலையில் மற்ற சிறுவர்கள் ஸ்ரீனிவாசனை தனியே
விட்டு விட்டு மாடுகளை திருப்பிக் கொண்டு வரச் சென்ற பொழுது தனித்திருந்த
ஸ்ரீனிவாசனுக்கு ஏதோ ஒன்று ஆங்கு நிகழ்ந்தது. (என்ன என்று புலப்படுத்தாத
சூட்சுமப்படுத்தி மறைத்தார்கள்).
மயங்கிச் சாய்ந்த ஸ்ரீனிவாசன் கொங்கணப் புற்றருகே மிக அருகில் புற்றுடன்
ஒட்டியவாறு அமைந்திருந்த ஓர் பள்ளத்தினுள் வீழ்ந்து செடிகளால் மறைக்கப்பட்டு
வீழ்ந்து கிடக்கலுற்றான்.
இச்செயலை அருகிலிருந்த பசு கண்டு புற்றருகே சென்று நின்று கொண்டு கத்திக்
குரல் கொடுக்க மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாடுகளை ஓட்டிக் கொண்டு அங்கே வர
ஸ்ரீனிவாசனைக் காணாமல் தேடும்பொழுது ஸ்ரீனிவாசனைக் காணாத தன்மை கொண்டு திரும்பிச்
செல்லத் தொடங்க அந்த ஓர் பசு மட்டும் செல்லாமல் அங்கே தங்கிவிட்டது.
மாட்டைக் காணாமல் தேடிவரும் மாட்டின் சொந்தக்காரன் அது காட்டுப்பகுதி
ஆனதால் தகுந்த ஆயுதங்களுடன் மாட்டுக்கார சிறுவன் சொல்லிய இடமாகிய அப்புற்றை
அடையாளமிட்டு தேடிக் கொண்டு வந்தான்.
அப்படி வருகின்ற காலகட்டத்தில் புற்றருகே பந்தலிட்டு சிறுவர்கள் கோவிலாக்கி
விளையாடிய அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்.
மாலைப் பொழுதில் பால் தரும் பசு தன் கன்றின் நினைவில் புற்று மேல் நின்று
பாலைச் சொரிய தானாக நிகழ்ந்த அச்செயலினால் உண்மை புலப்படாத மாட்டுக்காரன் கோப
மேலீட்டால் தடி கொண்டு மாட்டி அடித்து விரட்டினான்.
அதற்குப்
பின் மாடு மேய்க்கும் சிறுவர்கள் பந்தலிட்டு புற்று மேல் கோவில்
ஆக்கிய நிலை கண்டு மேலும் அதிகக் கோபம் கொண்டு மாட்டுச் சிறுவர்கள் மேல் பொங்கிய
கடும் கோபம் இப்பொழுது கொங்கணப் புற்றின் மீது திரும்ப…
கையில் கொண்டு வந்திருந்த பலமான ஆயுதத்தினால் பந்தலை உடைத்து எறிந்து விட்டு “அப்புற்றையே இடிக்கத் தொடங்கினான்…”
பண்டு வினைப் பயன் (பண்டைய கால) வந்துறுத்த மாட்டுக்காரன் செய்த
இச்செயல் அவனது கடும் கோபம் மாட்டின் பால் வீணாய்ப் போனதாலும் சிறுவர்கள் மாடுகளை
ஒழுங்காகக் கவனியாமல் விளையாடினார்கள் என்றெல்லாம் கருத்தில் கொண்டு… அத்தனையும் இப்புற்று இனி இங்கிருந்தால் மீண்டும் அதே செயல்நிலை தொடரும்
என்ற எண்ணினான்.
அப்போது
கோபம் கொண்டு சுய அறிவு நீங்கிப்போன மாட்டின் சொந்தக்காரன் கரத்தில்
இருந்து நழுவி விழுந்த அக்கனமான ஆயுதம் புற்றருகே இருந்த பள்ளத்தில் வெகுவேகமாகப்
பாய்ந்து சென்று ஏதோ மயக்க கதியில் துயில் கொண்டுள்ள ஸ்ரீனிவாசன் தலை மீது
விழுந்து தலை பிளந்து உயிர் பறித்தது.
பரிசுத்தவானாகிய ஸ்ரீனிவாசன் தன் சரீரம் செயல் கொண்டிட காத்திருந்த கொங்கண
மாமுனி வெளியேறும் அவ்வுயிர் ஆன்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு பரிசுத்த ஆவி
ஆகிய தன் உயிர் ஆத்ம ஒளிகாந்தத்தை அவனுள் பாய்ச்சி உட்சென்றார்.
“எந்த அவதார நோக்கமோ” அது நடைபெறும் செயல்
நிலைக்குத்தானே ஸ்ரீனிவாச உருக்கோலம் கொண்டு ஜடாக்கினி ஜெபத்தால் வீறு கொண்டு
பள்ளத்தினுள் இருந்த சடாரென எழுந்து நிண்றார்.
கனவில் கூட இத்தகைய காட்சியை கண்டிராத அம்மாட்டின் சொந்தக்காரன் ஆயுதம் கை
நழுவி அப்பள்ளத்தில் விழ்ந்த ஒரு கணத்தில் திகைத்தவன் திகைப்பு தொடர்போல் நடக்கும்
அக்கண நேர சம்பவத்துள் தலையில் சொருகப்பட்ட ஆயுதத்துடன் குருதி கொப்பளித்து
வழிந்தோடி வர செக்கச் சிவந்த குருதி உடலெங்கும் வழிந்தொழுக சிவந்த நிற உடலுடன்
விருட்டென எழுந்த ஸ்ரீனிவாச அவதாரத்தைக் கண்டு திகைப்படைந்தான்.
முடிவில் பய உணர்வு ஆட்கொள்ள “ஆ” என அலறிய மாட்டின் சொந்தக்காரன் வெல வெலத்துப் போய் மிக மிக பயந்து
நடுங்கி ஓட்டம் எடுத்து ஓடும் பொழுதே மயக்க நிலையில் விழுந்தான்.
அதைக் கண்ணுற்ற கொங்கண ஸ்ரீனிவாச நாயகன் எப்பொழுதும் எண்ணி வந்த தாய் சக்தி
அழைத்திடும் நிலை அறிந்து, தலையில் தைத்த ஆயுதத்தைப் பறித்து
அகற்றிவிட்டுத்
1.தான் ஏற்ற ஸ்ரீனிவாச அவதார சரீரத்தின் நலிவு அகற்ற கூட நாட்டமின்றி
2.பசுவைக் கண்ட கன்று போல் வெகுவேகமாக செல்லத் தொடங்கினார்.
ஸ்ரீனிவாசன் அவதாரம் எடுத்த கொங்கண மாமுனி தான் ரிஷித் தன்மைக்கு உயரும்
வழிகாட்டும் செயல் நிகழ்த்த உருக்கோலம் கொண்டிட்ட தாய்சக்தி “வாலை” அம்மன் வகுளாம்பிகை என்று பெயர் நாமப்படுத்தி
அமர்ந்திட்ட மலைமுகட்டுக் குடிசையை நோக்கிச் சென்றார்.
இவர்
வரவைக் காத்துக் கொண்டிட்ட அவ்வம்மை தலையில் இருந்து குருதி
வழிந்தோடும் செயல் கண்டு புன்னகையுடன் நின்று கொண்டு மகன் கைகூப்பி வணங்கும்
பாவனைப் படுத்திய நிலை கூட மறந்து தாயுள்ளம் கொண்டிட்ட பாசத்தினை வெளிப்படுத்தி “மகனே ஸ்ரீனிவாசா…!’ என்ற சொல் தொடரில் வேகத்தைக்
காட்டிணார்.
காயம்பட்ட
இடத்தில் பச்சிலை வைத்தியம் செய்திட்ட கருணைக்குப் பின் அக்குடிசைக்குள் அனுதினமும் நடைபெற்று வந்த
1.வகுளாம்பிகையின் ஆராதனை என்பது கொங்கண மாமுனிக்குப் போதனையும்
2.தாய் தெய்வ வணக்க முறை என்பது கொங்கணருக்குத் தவமுமாய் நடைபெற்று வந்தது.