சோகமா…! சுகமா…?
இமைகளின் துரித கதி இயக்கத்தின் ஊடே (தூசி)
உள் நுழையும் செயலே சந்தர்ப்பவசம்.
ஞானத்தின் பாங்கு செயல்பட விழிப்பு கொள்ளும் மனம்… வாழ்க்கையின்
நடைமுறை அனுபவ சந்தர்ப்பங்கள்… படர்தல் எனும் எண்ணத்தின் குணம்
நம்முள் இயங்கி அனுபவ நிகழ்வுகளை உணர்த்துகின்றன.
1.இமை காத்திடும் செயலின் கவனம்
2.அந்த இயற்கை உணர்வின் உந்துதல்… “நொடிக்கும் குறைவான காலமே…”
கண்ணில் படிந்த தூசியின் உறுத்துதல் “உடனடியாக
உணர்த்துவதைப் போன்று…”
1.மெய் ஞானத்தின் ஆன்ம வலு காட்டிடும்
செயலில் நாம் ஊட்டிக் கொள்ளும் குணங்களின் செயலில்
2.அக்குணங்களின் வலுவைக் கூட்டும்
ஈர்ப்பின் சந்தர்ப்பவசங்கள்…
3.வாழ்வின் நடைமுறை அனுபவ நிகழ்வுகள்
காட்டுவதை மனிதர்கள் உணர்வதில்லை.
நடைமுறை அனுபவங்களில் நாம் சந்திக்கும் துக்கமோ
அல்லது மகிழ்ச்சியோ அதை அனுபவித்திடும் செயலாக அதே உணர்வுகளின் வலுவைக் கூட்டிக் கொள்வதினால்
மாமகரிஷிகள் சுட்டிக்காட்டிய “சோ..க…ம்” கிடைக்குமா…?
ஆத்ம சக்தி எனும் அருமருந்தைக் கைகொள்ளும் நமக்கு… எண்ணியதை
எண்ணியபடி பெற்றுவிடும் நற்பயனாய்… ஈர்ப்பின் செயல் அச்செயலுக்குள்
சமைப்பு…
1.“சமைப்பின் பலன்…” என்றே கொள்ளும் குணங்களின் வலுவை வலுவாக்கிடும் செயலில்
2.”சோகம்” என்ற
நாதம் இன்று மனிதனின் எண்ணத்தில் அது வெறும் துக்கமாகத் தான் காட்டப்படுகின்றது.
கலங்குகின்ற நெஞ்சம் சரீரம் கொண்டு அனுபவித்திடும்
துக்கமாகப் பெருக்கிக் கொண்டு இடர்படும் நிலைகள் இராமன் பெற்ற அனுபவங்களாக அதனுள் மூழ்கி… கொண்ட
குணங்களை வலுவாக்கிடும் செயலின் துரிதம் போல… நற்குணங்களின் செயல்பாட்டில்
உயர்வைக் கூட்டிக் கொள்ள செயல்படும் குணங்களின் தன்மைகளில் “துரிதமும்… செயல்பாடும்… ஒன்றே…!
வானைச் சுட்டிக்காட்டி செயல்பாட்டின் பேதங்களைப்
பகுத்தறியும் பண்பாக “சோ…” என்ற ஒலி ஈர்ப்பில் “க…” எனச் சமைத்து “ம்…” எனும் முழுமையாக
நம்மால் நற்குண நற்சுவாசமாக எடுத்து… மாறு கொண்ட குணங்கள் நமக்குள்
வந்து ஊறு விளைவிக்கும் செயலை மாற்றி… விரிவு கொண்டிடும் நல்
ஒளி அணுக்களின் செயல் உறுதியாக்குவதே “சோ…க…ம்…”
(குறிப்பு:-
சோகம்…சோகம்…சோகம்…
என்று ஒரு இருபது முறை வேகமாகச் சொல்லிப் பாருங்கள்… “சுகம்”
என்று வரும்)
சூரியன் சுழலும் பொழுது ஒலி
வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன்
நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள்
இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை
வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத
சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.