ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2025

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா

நன்மை தீமைகளை உணருவதைக் காட்டிலும்… உயர்ந்த சம நிலையை உணர்த்துகின்றேனப்பா


1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.னிவுறும் ஞான தேசிகனாகின்றான்.
 
உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம் சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள் எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் கால் என்பது ஒவ்வாத செயல்…!
 
ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமா ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே
நற்குண
நன்னெறி கொள்ளும்
மனத்தின் திட சங்கல்ப
உறுதி நிலை…”
 
மோகம் கோபம் அதி ஆசை என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.
 
குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே - வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.
 
நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இரு நிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.
 
ஞானம் என்பது எது…?
 
பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்
2.இதற்கும் மேலாக சமமான நிலை…”
 
உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.
 
1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!