ஒளியின் சக்தியைப் பெற்று உயர்ந்திடுவேன்
இராமன் குகன் மீது
நட்பு கொண்டான்... குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான்
என்றாலும்...
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக...
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது
ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும்
பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின்
உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.
ஆனால் இராமன் தன்
பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள்
வந்து உயிரணுக்களாக... மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.
ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும்
உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன்
கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான
எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம
காவியத்தின் சூட்சுமம்.
அன்பின் வசம் தான்
அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!
உலக நிலையில் ஒன்றை
அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள்
சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்
புயலால் கடல் மிகவும்
கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின்
மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத
நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,
மேகத்தின் ஊடே சூரிய
ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப்
போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்
ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!”
(ஞானிகள் வழி)
இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!