ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2025

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்

உலகில் சூழ்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள்


ராமன் விஷ்ணு தனுசை எடுத்தான் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தான் சுவை மிக்க நிலை சீதாராமன்…!
1.அந்தச் சுவைமிக்க உணர்வு கொண்டு… சொல்லாக உணர்ச்சிகள் உடலுக்குள் வரும்பொழுது
2.உடலுக்குள் உருவான சிவ தனுசு உடலைக் காக்கும் நிலைகளில் இருந்து அருள் ஒளியின் உணர்வாக மாற்றி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும்.
 
சிவ தனுசு விஷ்ணு தனுசு என்று ராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருளை எப்படிக் காண வேண்டும்…? என்று கூறப்பட்டுள்ளது. அதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
இப்பொழுது கடும் யுத்த காலமாக இருக்கிறது. பார்த்தால் சமாதானமாகப் போவதாகத் தெரிய வரலாம். இருந்தாலும் ஒவ்வொரு நொடிகளிலும் ஒருவருக்கொருவர் போட்டியின் தன்மைகள் அதிகரித்து மிரட்டும் தன்மையே வந்துவிடும்.
 
விஷமான குண்டை ஒரு நாட்டின் மீது போட்டால் அது வெடிக்கும் தன்மை விஞ்ஞான அறிவால் வந்துவிடும்.
1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற இயக்க சக்தியின் நிலைகள் கம்ப்யூட்டர் பாதுகாப்பில் இருக்கும் அந்த நிலைகள் (குண்டுகள்)
2.ஒரு நொடி திசை மாறினால் விஷ குண்டுகள் முழுவதும் வெடிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் பரவும் தன்மை வந்துவிடும்.
 
அப்படிப் பரவினால் மக்களை அழித்திடும் உணர்வாகவே வந்துவிடும். விஷ உணர்வுகள் பரவினால் உடலை விட்டுச் சென்ற பின் புழுவாகப் பூச்சியாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.
 
இதிலிருந்து மீள வேண்டும் என்றால் பல காலம் கழித்துத் தான் மீண்டும் மனிதனாக உருப் பெரும் நிலை உருவாகும்.
 
1.மனித உடலில் இனி இருப்பார்கள்.. ஆனால் அசுரனாகத்தான் இருப்பார்கள்.
2.அதே சமயத்தில் கடும் நோய்களாக உருவாகிவிடும்.
3.கேன்சர் டிபி போன்ற நிலையில் எல்லாம் விஷத்தன்மையால் உருவானது தான்.
 
இவைகளில் இருந்து நாம் மீள துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தியானித்து அந்த வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தல் வேண்டும்.
 
அவர்கள் உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்பட்டு அதன் துணை கொண்டு நமக்குள்ளும் இருக்கும் நஞ்சின் உணர்வுகளை நாம் கரைக்க முடியும்.
 
ற்றும் பாசத்துடன் நம் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நோயின் உணர்வு கொண்ட நிலையில் பண்பால் பரிவால் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் தான் வளர்கின்றது. அந்தத் தீயவினைகளை நம்மில் இருந்து அகற்ற வேண்டும்.
 
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அந்த மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கப்படும் பொழுது உடலில் பெற்ற நஞ்சு கரைக்கப்படுகின்றது. சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழத் தொடங்குகிறது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை உணவாக எடுத்து வாழத் தொடங்குகிறது.
 
ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றினார்கள் என்பது இதுதான். ஆகவே உடலை விட்டு யார் பிரிந்து சென்றாலும் அந்த 48 நாட்களுக்குள் நாம் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
1.கணவன் மனைவியாக இருப்பினும் யார் முதலில் உடலை விட்டுச் சென்றாலும்
2.விண் செலுத்தும் உணர்வுடன் ந்திச் செலுத்தப்படும் பொழுது கணவன் மனைவி உயிரான்மாக்கள் இரண்டற இணைக்கப்பட்டு
3.ஒளியின் உணர்வாகி என்றுமே உணர்வின் ஒளியாகப் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
 
வாழ்க்கையில் இதை நாம் அவசியம் பெறுதல் வேண்டும்.
 
பூரண பௌர்ணமி ஆன நிலையில் சப்தரிஷி மண்டலம் அருகில் வரும் அந்தச் சமயத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அதை நாம் எண்ணி எடுக்கப்படும் பொழுது அதைக்வர்ந்து ஒளி அலைகளைப் பரப்பி தியானத்தின் மூலமாக விண் செலுத்தும் ஆற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.  இப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாஅது ன்றப்படுகின்றது.
 
அதை நினைவு கொண்டு மீண்டும் எங்கள் எண்ணி வளர்த்தல் வேண்டும் அதற்குத் தான் உபதேசிப்பது.
 
திட்டியவனை எண்ணியவுடன் அது பதிவாவது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது உங்களுக்குள் போதிக்கின்றேன்... ஊழ்வினையாகப் பதிவாகின்றது.
 
நீங்கள் மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமைகள் அகற்றிடும் அந்த எண்ணம் உங்களைக் காக்கும்.
1.எதை நுகர்கின்றீர்களோ உயிர் உங்களை இயக்கி நஞ்சினை நீக்குகின்றது நல்ல உணர்வுகளை வளர்க்கின்றது
2.பிறவி இல்லாத நிலை அடையச் செய்கின்றது.
 
ஆகவே பேரரருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.