ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2025

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்

பஞ்ச அபிஷேகம் பஞ்ச அமிர்தம்


முருகனுக்குப் பஞ்சாபிஷேகம்…! பல பழங்களைப் போட்டு அபிஷேகம் செய்தால் முருகன் நமக்கு நல்லது செய்வான் என்று எண்ணுகின்றோம். ஐந்து கனிகளின் உணர்வுகள் வரப்படும் பொழுது வெப்பம் காந்தம் விஷம் இதனால் தான் அந்தக் கனியின் தன்மை அடைந்தது.
 
எதன் பொருளை எடுத்துக் கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது. ஆறாவது அறிவின் துணை கொண்டு அங்கே பஞ்ச அபிஷேகம் நடக்கிறது என்றால்
1.அதைப் போன்ற மம் நான் பெற வேண்டும் அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி நம் உயிரிலே அபிஷேகித்தால்
2.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ட்டி உயர்ந்த உணர்வினை ஊட்டியதோ - பஞ்சாமிர்தம்
3.அந்த ஐந்து விதமான அமிர்தங்களாக நமக்குள் எப்படிச் சுவையை ஊட்டுகின்றதோ இதைப் போல
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புலனறிவில் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் பஞ்ச அமிர்தம் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
 
து தான் காயத்ரி…!
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர். அந்த உணர்வு உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.
1.உடலுக்குள் செல்லப்படும் பொழுது அவன் எப்படித் தீமைகளை வென்றானோ அந்த உணர்வின் தன்மை நம் உடலிலே வருகின்றது.
2.அது தான் வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்மகுரு.
 
அப்போது நம் உடலிலே தீமையை வெல்லும் உணர்வுகள் எப்படிப் பிரம்மம் ஆகின்றதோ அந்தச் சக்திக்கு பெயர் அருந்ததி காரணப்பெயர் வைக்கின்றார்கள் நாம் தெரிந்து கொள்வதற்கு…!
 
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எப்படி ஆகின்றது…? என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.
 
அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாகின்றதோ இந்தப் பத்தாவது நிலை அடையக்கூடிய சக்கரவர்த்தியின் மனைவி அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.
 
ஆறாவது அறிவு கொண்ட மனிதன் “முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். கருணைக்கிழங்கில் என்று விஷம் இருக்கிறது என்றால் அதை வேக வைத்து விஷத்தை நீக்குகின்றோம். தொக்கி உள்ள நிலைகளைப் புளியைக் கரைத்து விட்டு விஷத்தைத் தணிக்கின்றோம்.
 
மிளகாயைத் தனியாகச் சாப்பிட்டால் ஆ…! என்று அறச் செய்கின்றது. ஆனால் புளியுடன் சேர்த்து இணைக்கப்படும் பொழுது உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை பெறுகின்றோம். உப்பையும் மற்ற சரக்குகளையும் சேர்த்துச் சுவையாந குழம்பாக மாற்றுகின்றோம். முருகு… மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன் மனிதன்.
 
கார்த்திகேயா என்ற நிலையில் சகலத்தையும் அறிந்து பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி கருணைக்கிழங்குக் குழம்பை உட்கொள்ளும் பொழுது
1.அந்த உணர்வுகள் உணர்ச்சிகள் பஞ்ச அபிஷேகமாக நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிரிலே பட்டு அத்தகைய உணர்வின் அமிலங்களாக உருவாக்கப்படுகின்றது… எச்சில் நீராக அது மாறுகின்றது.
 
அதாவது உணவாக உட்கொள்ளும் அந்தச் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது நம் இரத்தத்தில் கலந்து… அந்த அணுக்களின் லமாகி நம் உடலை நல்லதாக்கி உடலை ஆரோக்கிய நிலை பெறச் செய்கின்றது….”
 
ஆனால் விஷத்தை அடக்குகின்றது. ஆறாவது அறிவு மகிழ்வாகனா மயில் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவதை அங்கே காட்டி நம்மைத் தெளிவாக்கும்கின்றனர்.
 
காரணம்… மயில் நஞ்சினை விழுங்குகின்றது அதனின் உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.
 
விஷத்தைக் காலடியில் வைத்து அடிமைப்படுத்தி இருக்கின்றது என்று காட்டுவதற்குத் தான் உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி
1.அதனுடைய இயக்கத் தொடர் நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கப்படும் பொழுது எப்படி எல்லாம் வளர்ந்து மனிதனாக வந்தோம்…?
2.தீமைகள் அகற்றிடும் சக்திகளை நாம் பெற்று வந்ததைக் காட்டுகின்றார்கள்.
 
மனிதனாக வருவதற்கு இத்தனை சக்திகளும் காரணமாக இருந்தது என்பதனை மயிலை காட்டி அதன் காலடியில் பாம்பையும் வைத்து நமக்கு காட்டுகின்றார்கள் இந்த உண்மையை கண்டுணர்ந்த ஞானிகள்.
 
புற நிலையில் செய்வதை அகநிலைகளுக்குக் காட்டி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு தீமைகளை அடக்கிச் சுவை மிக்கதாக
2.பஞ்ச அமிர்தமாக நமக்குள் உருவாக்க முடியும் என்று உருவத்தை காட்டி உள் பொருளை அறியும் படி செய்கின்றார்கள்.