ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2025

உயர் ஞானத்தால் மகரிஷிகளுடன் கலக்க முடியும்

உயர் ஞானத்தால் மகரிஷிகளுடன் கலக்க முடியும்


1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி... பின் மாற்றமாகி
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.
 
மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும் இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”
 
ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது...
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே அறிவின் தெளிவு…”
 
தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.
 
சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது தொழில்படு வினையின் கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும் இரு விதமான செயல்கள் உண்டு (இடது வலது).
 
சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட வேரற நீக்கிடும் செயலுக்கு
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.
 
அதே போல்
1.தாய்மையின் மேன்மையை... சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.
 
ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால் அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும் பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.
 
பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளேநீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் பாசி பிடித்தல் என்ற நிலையைக் காட்டும்.
 
வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.
 
அது போல்
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம் என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் - ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.