ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2025

குருநாதர் விண் சென்ற வழியில் தான் அனைவரையும் விண்ணுக்கு ஏற்றுகின்றோம்

குருநாதர் விண் சென்ற வழியில் தான் அனைவரையும் விண்ணுக்கு ஏற்றுகின்றோம்


நமது குருநாதர் (ஈஸ்வரபட்டர்) மனிதரோடு வாழ்ந்தவர் தான். இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை கொண்டு மக்கள் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கின்றார்.
 
ஆனால் சாமியைப் பார்த்தால் அது கிடைக்கும் இது கிடைக்கும் என்று சொல்லி ஏதோதோ வைத்தியத்திற்கெல்லாம் வருவார்கள்… என்னென்னெமோ கேட்பார்கள்.
1.கேட்பதற்குத் தான் என்னிடம் வந்தார்களே தவிர “நல்லதாக்குவதற்கு யாருமே இல்லையப்பா…” என்று என்னிடம் சொன்னார் குருநாதர்.
2.ஆகவே நான் சொல்லும் முறைப்படி அருள் உணர்வை எடுத்து என் ஆன்மாவை நீ விண் செலுத்து.
3.அதற்குண்டான சிஷ்யனைத் தான் (ஞானகுரு) அவர் தேர்ந்தெடுத்தார்.
 
மந்திரவாதிகள் என்ன செய்வார்கள்…?
 
சாகும் போது மந்திரத்தை எல்லாம் அதற்குண்டானவரிடம் சொல்லிவிட்டு இறக்கி வைப்பார்கள். ஆன்மா வெளி செல்வது எவன் அந்த மந்திரத்தை ஜெபிக்கின்றானோ அவன் உடலுக்குள் வரும். கற்றுணர்ந்த உணர்வை எல்லாம் இங்கே மீண்டும் செயல்படுத்தும்.
 
ஆனால் நம் குருநாதர் என்ன செய்தார்…?
 
1.அந்த அருளைப் பெருக்கிய உணர்வு கொண்டு இருளை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்து
2.அருளைப் பெற வேண்டும் என்ற க்க உணர்வு கொண்டு விண் சென்றார்.
3.அதே முறையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுர்ந்து அதன் வலு கொண்டு சாதாரண மக்களையும் விண் செலுத்தினால்
4.இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைகின்றது உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளிச்சரீரம் பெறுகின்றது.
5.அந்தக் குடும்பத்தாருக்கு மிகவும் நல்லது.
 
அந்த நிலையைச் செய்வதற்குத் தான் மாதம்தோறும் பூரண பௌர்ணமி அன்று ஆன்மாக்களை கூட்டுத் தியானத்தின் மூலம் விண் செலுத்தும் படி செய்கின்றோம்.
 
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களை விண் செலுத்தினால் அவர்கள் வழியில் நாமும் பின்பற்றி சப்தரிஷி மண்டல எல்லை அடைய ஏதுவாக இருக்கும்.
 
1.ஏனென்றால்… நம்மை மனிதனாக உருவாக்கி வளர்ந்து உயர்ந்த நிலை பெற வழி வகுத்துக் கொடுத்தவர்கள் முன்னோர்கள் தான்.
2.அந்த விழுதுகள் நாம் தான்
3.ஞானிகள் காட்டிய வழியிலே விண் செலுத்தினால் அவர்கள்ளிச் ரீரம் பெற்றால்
4.நம்முடைய எண்ணத்தால் துரிதமாக அங்கிருந்து உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
5.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளையும் அகற்ற முடியும்.