பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப் பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்
பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் அதை
மீண்டும் ஏற்றிக் கொள்வது போன்று
1.ஒவ்வொருவரும் அதிகாலை துருவ தியானத்தைச் சீராக எடுத்துக் கொண்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அதிகரித்துக் கொண்டால்
3.அன்றாட வாழ்க்கையில் வருவதையெல்லாம் நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.
காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ
பேரைச் சந்திக்க நேர்கின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம்
போன்ற உணர்வுகளை நாம் சந்திக்க நேர்கின்றது.
அப்படி நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த
உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த… “துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை
உடனடியாக துரிதமாக ஏங்கி நம் உடலுக்குள் செலுத்தினால்” தீமைகள் நமக்குள்
புகாது தடுக்க உதவும்.
காலையில் இந்த நினைவலைகளை நாம் அதிகமாகப்
பெருக்கி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க
1.துருவ நட்சத்திரத்துடன் நம்முடைய பற்று அதிகரிக்கின்றது…
2.இந்தப் புவியின் பற்றைத் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.எந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை அதிகமாக எடுத்தோமோ…
உடலுக்குப் பின் நம்மை அங்கே அழைத்துச் செல்லுகின்றது நம் உயிர்.
இந்த உடலில் சேர்த்த உணர்வுகள் தீமை
என்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் அருகிலே செல்லும் பொழுது இந்த உடலில் பெற்ற தீமைகளை
அங்கே கருக்கி விட்டு…
2.இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.
3.எத்தகைய நஞ்சு இருந்தாலும் அதை மாற்றி விடுகின்றது.
பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற
உயிரினங்களை உட்கொண்டாலும் அந்த விஷமே அதற்குள் மீண்டும் சேமித்துச் சேமித்து
நாகரத்தினமாக மாறுகின்றது.
இதைப் போன்று தான் நமது வாழ்நாளில் அருள்
மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி
ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
மனிதராக இருக்கும் நாம் தான் இதைச் செயல்படுத்த
முடியும்.
மிருகங்கள் தான் வாழத் தன்னைக் காட்டிலும்
வலுக் கொண்ட உணர்வைச் சுவாசிக்கும் பொழுது… அந்த உணர்வை
வளர்த்து உடலுக்குப் பின் பரிணாம வளர்ச்சியில் அடுத்த உடலைப் பெறுகின்றது.
ஆனால் மனிதன் அன்பும் பண்பும் பரிவும்
கொண்டு இருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறியும் போது உதவி செய்தாலும் அந்த
நோய் மிகவும் வலிமையானது… விஷம் கலந்தது.
அதை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின்
உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது. பின் நல்ல
குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
இந்த உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை
உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அணுக்கள் மடியத் தொடங்கும். நம்
உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.
உடல் குறைந்து விஷத்தின் தன்மை பெருகும் பொழுது
உயிர் உடலை விட்டுச் சென்று மனிதரல்லாத உருவை உருவாக்கி விடும்.
அதை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின்
உணர்வுகளை சேர்க்கச் சேர்க்க
1.உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா எதன் வலுக் கொண்டதோ
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருகிலே நம்மை அழைத்துச் செல்லும்.
தீமைகளைக் கருக்கிடும் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் சக்திகள் பட்டப்பின் மனித வாழ்க்கையில் நாம் சேர்த்துக் கொண்ட
தீமைகளை அங்கே கருக்கிவிட்டு… உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால்
செலுத்தப்பட்டு பேரருள் பேரொளி என்று ஒளியின் சரீரமாக… அழியா ஒளிச்
சரீரமாக பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற
பின்பு தான் முழுமை அடைய முடியும்… உயிர்.
ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
மகரிஷிகள் பெற்ற ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று
2.இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு என்று நீங்கள் வாழப்
பிராத்திக்கின்றேன்… தவமிருக்கின்றேன்.