ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2025

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்

வெங்கடாஜலபதியை தோஸ்த் செய் என்றார் குருநாதர்… “எனக்கு முருகன் தான் வேண்டும்” என்றேன் நான்


என்னுடைய உபதேசத்தை எத்தனை பேர் எத்தனை விதமாக எடுத்துக் கொள்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. காரணம் எத்தனையோ பேர் சொத்துக்கும் சுகத்திற்கும் தான் ஆசைப்படுகின்றார்கள்.
 
குருநாதர் என்னிடமும் இப்படித்தான் வினா எழுப்பினார்…!ழியாச் சொத்து கிடைக்கும்டா…! என்றார்.
 
ஓய் தெலுங்கு ராஜ்யம்…! இங்கே வாடா…! என்று என்னைக் கூப்பிட்டார்.
 
நான் போனேன்.
 
வெங்கடாஜலபதியை தோஸ்த் பண்ணிக்கோ நிறையச் சொத்து கிடைக்கும்…! என்று சொன்னார்.
 
ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ
1.என்னை காப்பாற்றுவதற்கு ஞானம் வேண்டும்.
2.ஞானவான் என்று முருகனைச் சொல்லி இருக்கின்றார்கள்
3.ஆகையினால் முருகன் தான் எனக்கு வேண்டும் என்று சொன்னேன்.
 
அவன் ஆண்டிப்பயல் ஒன்றும் கொடுக்க மாட்டான்…! ஆனால் வெங்கடாஜலபதியைப் பிடித்தால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்…! என்று இப்படி எல்லாம் என்னைச் சிக்கலான நிலையில் சோதிப்பார் குருநாதர்.
 
ஆறாவது அறிவு ஞானம். வாழ்க்கையில் மெய் ஒளியின் தன்மையை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இதைச் சொல்லி இருக்கின்றார். கேள்விகளைப் போட்டு என்னை மடக்கி ஆசையைத் தூண்டுவார்
1.உடல் ச்சைக்குக் கேட்கின்றேனா அல்லது
2.அருள் ஞாத்திற்கு என்னுடைய எண்ணங்கள் செல்கின்றதா…? என்று பல பரீட்சைகள் வைப்பார்.
 
அப்பொழுது நான் என்ன செய்வது…? எனக்கு முருகன் தான் வேண்டும் என்றேன்.
 
இல்லை வெங்கடாஜலபதியை நீ வைத்துக் கொள்…! முருகன் என்றால் ரொம்பக் கஷ்டப்படுவாய் என்றார்.
 
முருகனை வைத்து எனக்குக் கஷ்டம் வராது…! என்பேன்.
 
அடிக்கடி இரண்டு பேருக்கும் இப்படி வாக்குவாதம் வரும்.
 
1.குருநாதர் பைத்தியக்காரத்தனமாகத்தான் பேசுவார்.
2.ஆனால் அத்தனையும் பொருள் பொதிந்ததாக இருக்கும். குறுகிய காலத்திற்குள் இந்த மாதிரி உருவாக்குவார்.
 
ஆகவே அதிகாலையில் விழித்தவுடன் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும். ஆன்மாவில் பட்ட அழுக்கைக் காலையில் போக்கப் பழக வேண்டும்.
 
அதிகாலை 4 மணியிலிருந்து ஆறரை வரையிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வருகின்றது. அந்த நேரத்தில் நாம் அதை எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.
 
அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உபதேசமே அடிக்கடி கொடுப்பது. எனக்கு
1.குருநாதர் இப்படித்தான் கொடுத்தார் அந்தச் சக்தியை எடுக்கவும் சொன்னார்.
2.உங்களுக்கும் அதையே தான் கொடுக்கின்றேன்
 
எத்தனை பேர் நீங்கள் அதிகாலையில் எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கின்றது.
 
ஆனால் வெறும் உடல் அசைக்காக வேண்டி சொத்து கிடைக்கும் உடல் நலம் கிடைக்கும் என்ற நோக்கத்தில்… சாமியைச் சந்தித்தோம்…! சாமியிடம் ஆசிர்வாதம் கேட்டோம்…! என்றால் அது சிறிது நாளைக்குத் தான் இருக்கும். ரொம்ப நாளைக்கு இருக்காது.
 
உடலில் ஆசைகள் கூடிக் கொண்டே போகும். கிடைக்கவில்லை என்றால் வேதனை என்ற விஷம் வரும் பின் நல்ல குணங்களைக் காக்காதபடி ழித்துச் சென்று விடும்.
 
இது எல்லாம் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நிலைகள்…”
 
துருவ நட்சத்திரத்தின் சக்தியை அந்த அதிகாலை நேரத்திலே எடுத்துப் பழக வேண்டும்… “படுக்கையிலே இருந்தாலும் கூட…!”
 
 ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டுங்கள். அம்மா அப்பா ஆசி வேண்டும் என்று அடுத்து எண்ணுங்கள். பின் உயிரை வேண்டி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என் நினைவை
3.உடலுக்குள் திரும்பத் திரும்ப செலுத்திக் கொண்டே இருங்கள்.
 
இது மிகவும் முக்கியமானது.