
துருவ நட்சத்திரத்தை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எளிதில் பெறுவீர்கள்
எப்பொழுது துன்பம் என்று காணுகின்றோமோ
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற
வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால் உடலுக்குள் சேர்த்து இருளை நீக்கி
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் அது வலுவாகி
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அடைகின்றோம்.
1.இதைத்தான் குருநாதர்
எமக்குக் காட்டினார்... அதைத்தான் உங்களுக்கும் சொல்கின்றேன்.
2.உங்களால் உங்களால்
முடியும். எப்படிச் சாத்தியமாக முடியும்…? என்று
எண்ணாதீர்கள்.
3.அருளைப் பெறுங்கள்…
இருளை அகற்றுங்கள் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும்
பேரின்பப் பெரு வாழ்வாக நீங்கள் பெற முடியும்.
தீமை என்று உணர்வைக் கேட்டறிந்தாலே துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை உடனுக்குடன்
தூய்மையாக்கிக் கொள்ளலாம்.
யார் வெறுப்படைந்தனரோ அவருக்கும்… அதாவது அந்த ஆண்டவன் வீற்றிருக்கும்
ஆலயத்தில் பரிசுத்தமாக்கும் உணர்வுகள் தோன்ற வேண்டும் என்று நினைவைச் செலுத்தினால்
போதுமானது. “அவர் வேண்டாதவர்” என்ற
எண்ணங்கள் வராது அடுத்து.
காரணம் அந்த உயிர் அவரை ஆளுகின்றது. ஈசன்
ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால்
நமது ஆலயம்… நம் உடலும்
தூய்மையாகின்றது.
இப்படி நாம் எண்ணும் உணர்வு எதுவோ அதுவே
அரங்கநாதன் இந்த உணர்வின் சக்தியாக நம்மை அருள் வழியில் இயக்கும்.
1.அதையே நமது உயிர் ஆளும்
ஆண்டவனாக.
2.ஆகவே… அனைவரும் ஆண்டவனின் பிள்ளைகள் தான்.
3.அவன் ஆண்டு
கொண்டிருக்கும் உடல்தான் ஆலயம்.
இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! உயிரால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் இது.
பல கோடிச் சரீரங்களில் தழைத் தாம்புகளைத்
தின்றோம் கனிகளைத் தின்றோம். இன்று மனிதனான பின் இயற்கையில் விளைந்ததை வேக
வைத்துச் சுவை மிக்க உணர்வுகளைப் படைத்துச் சாப்பிடும் மனித உடலைப் பெற்றுள்ளோம்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப்
பெறத் தொடர்ந்து உங்களுக்கு உபதேசம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன். இவை எல்லாம்
அருள் ஞானிகள் கண்ட பேருண்மைகள்.
1.ஞான வித்தை ஊன்றியுள்ளோம்…
தியானத்தின் மூலம் அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.மெய்ப்பொருள் காணும்
அருள் சக்தியை உங்களுக்குள் உரமாக்கிக் கொள்ளுங்கள்.
3.உங்கள் உடலில் உள்ள
அணுக்கள் அனைத்திற்கும் அந்த சக்தியைப் பெறச் செய்யுங்கள்.
4.மெய் வழியில் செல்லும்
அருள் பாதையை அது வகுத்துக் கொடுக்கும்.
மெய் வழி வாழ்வோம்… அருள் வழி வாழ்வோம்…!