ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2025

நாம் சமைக்கும் உணவின் ருசி “எப்படியெல்லாம் மாறுகிறது…?” என்று தெரிந்து கொள்ளுங்கள்

நாம் சமைக்கும் உணவின் ருசி “எப்படியெல்லாம் மாறுகிறது…?” என்று தெரிந்து கொள்ளுங்கள்


சமையல் செய்யும் பொழுது வெறுப்புடன் இருந்தார்கள் என்றால் அவர்களை அறியாமலேயே காத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். இந்த உணர்வுக்குத் தக்க தான் பதார்த்தங்கள் சமைக்கப்படும். உணர்வின் எண்ணத்தால் இயக்கப்படும் நிலைகள் இது…!
 
ஆனால் உணர்வின் நிலைகள் நம்முடைய எண்ணங்கள் அதற்குள் பட்டவுடன்
1.பாத்திரத்திற்கு இதை ஈர்க்கும் சக்தி வந்து விடுகின்றத
2.அதற்குள் இருக்கக்கூடிய பொருள்கள் இழுக்கும் சக்தி பெறுகின்றது.
 
வேதனையுடன் இருந்து நீங்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டால் கசக்கத் தொடங்கும். காரணம் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது பித்த சுரப்பிகள் அதிகமாகி அது விஷம் தோய்ந்ததாக மாறுகின்றது.
 
ப்படிச் சுரக்கப்படும் நிலையில் உணவுடன் இணைந்து விட்டால்
1.எவ்வளவு ருசியாக உணவு சமைக்கப்பட்டு இருந்தாலும் அது கசக்கத்தான் செய்யும்.
2.இவரின் உணர்வு பட்ட பின் காற்றிலிருக்கும் கசப்பு அதற்குள் கலக்கப்பட்டு உணவின் ருசியை மாற்றிவிடும்.
 
சில வீடுகளில் சமையல் நன்றாகச் செய்வார்கள். ஆனாலும் அங்கே கோபமாக வெறுப்பாக வேதனையாக இருப்பவர்கள் சமைத்தார்கள் என்றால் ருசி கெட்டுவிடும்.
 
இது நம்மை அறியாமலே மறைமுகமாக நடக்கும் சமாச்சாரம். இதையெல்லாம் எனக்குத் தெளிவாக காட்டுவதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்றார்.
 
சிறிது அரிசி மோரில் ஊற வைத்த கத்திரிக்காய்… மோரில் ஊற வைத்த மிளகாய் அதனை எல்லாம் உப்பை கொஞ்சம் போட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஒரு சிறிய டப்பா தான். தீப்பெட்டி ஒன்றுதான்.
 
காட்டிற்குள் இருக்கும் குச்சிகளை எடுத்து அடுப்பு போல மூட்டி டப்பாவில் நீரை ஊற்றி ஒரு பிடி அரிசியை உள்ளே போட வேண்டியது தான். நன்றாகக் கொதித்து வரும் பொழுது இன்ன அளவுக்கு இத்தனை மிளகாய் இத்தனை கத்திரிக்காய் என்று போடச் சொல்வார். அதிகமாகப் போட்டு விட்டால் ருசி கேட்டுவிடும் என்பார்.
 
போட்டுக் கொதித்து வந்த பின் அந்தக் கஞ்சியைப் பசியோடு இருக்கும் பொழுது சாப்பிடும் போது நல்ல ருசி வருகின்றது. சிறிதளவு அரிசி தான் ஆனால் இரண்டு பேருமே சாப்பிட முடிந்தது அதைக் குடித்த பின் பசியும் அடங்குகின்றது.
 
இதற்குப் பின் என்ன செய்கின்றார்…?
 
ஒரு வாரம் ஆனது.
1.பசியை உண்டாக்குகின்றார் சாப்பிட வேண்டும் என்ற க்கத்தை உருவாக்குகின்றார்
2.அந்த நேரத்தில் இந்தக் கஞ்சியைக் குடித்தால் கசக்கின்றது.
3.அந்த உணர்வுகள் அங்கே சென்றபின் தனுடன் கலந்து சுவை கேட்டு விடுகின்றது குடிக்க முடியவில்லை.
 
எங்கிருந்து வந்தது…? போன வாரம் சாப்பிட்டாய் இன்று சுவை இல்லாத நிலைகள் அடைகின்றாய்…!. இதனின் காரணம் உன் உணர்வின் நினைவுக்குள் எடுக்கப்படும் போது அணுக்கள் தனக்குள் இணைத்து உயிருடன் பட்டு உடலுக்குள் சுழலப்படும் பொழுது அதனுடைய நினைவுகள் இப்படி இயக்கத் தொடங்குகிறது.
1.அந்த உணர்வின் அமிலங்கள் நாக்கில் சுரபிகள் சுரக்கின்றது
2.பொருளைச் சாப்பிட்டால் சுவையற்றதாக மாற்றுகின்றது.
 
இப்படி விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.
 
நீ தவறு செய்யவில்லை. எப்படி உன்னுடைய சந்தர்ப்பங்கள்
1.நீ நுகர்வதையும் எண்ணங்கள் உருவாவதையும் நுகரும் ஆற்றல் எப்படி வருகின்றது…?
2.நுகர்ந்த உணர்வுகள் உன் உடலில் எப்படிச் செயல்படுகிறது என்பதை அனுபவரீதியாகக் கொடுக்கின்றார்.
 
குருநாதரிடம் பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டு வருகின்றேன்.