ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 25, 2025

உயிரின் வேலை

உயிரின் வேலை


சூரியன் மரம் செடி கொடியில் விளையும் சத்தைத் தனக்குள் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அதிலே விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.எந்த மரத்தின் வித்தோ அந்த உணர்வின் துணை கொண்டு காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து
2.பூமியின் துணைகொண்டு அந்த மரமாகவும் அந்தச் செடியாகவும் விளைகின்றது.
 
உதாரணமாக வேதனைப்படும் உணர்வை நுர்ந்தால் நம் உயிர் அதை ஜீவ அணுவாக மாற்றி மனித உடலின் இனத்திற்குள் சேர்த்து அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.
 
இருப்பினும் கோழியோ தன் இனப்பெருக்கத்தில் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலையில் அதனதன் நிறங்கள் அங்கே குஞ்சுகளாக வருகின்றது.
 
ஆனால் மனிதர்கள் நாம் நுகர்ந்த அணுவின் தன்மையோ (வேதனை) விஷத்தின் தன்மை கொண்ட அணு முட்டைகளாக விளைந்து விடுகின்றது. ரத்தங்களிலே அது சுழன்று வந்தாலும் குறித்த காலங்களில்
1.கோழி அடைகாத்த முட்டை குஞ்சான பின் குஞ்சு முட்டையிலிருந்து வெளி வந்து அது தன் உணவை எப்படித் தேடச் செல்கின்றதோ
2.இதைப் போல நம் ரத்தத்தில் உருவான அந்த அணுக்கள் ரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
3.உடலில் உள்ள அணுக்களுக்கு உணவாக எடுத்துச் செல்கின்றது.
 
அணுக்களுக்கு ரத்தம் உணவானாலும் அதன் உணர்வின் சத்து கலந்து நம் உடலுக்குள் அணுவின் தன்மை முழுமை அடைகின்றது.
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு அது உருவானதோ எந்த உடலில் இருந்து அது உருவானதோ
2.அதனின் உணர்ச்சியைத் தூண்டிய பின் அந்த உணர்வுகள் கண்ணின் நினைவலைகளுக்கு வரும் உயிருக்கும் வரும்
3.இந்த உணர்வுகள் உணர்த்தியபின் கண்ணின் நினைவாற்றல் வேதனைப்பட்டோரை நினைக்கச் சொல்லும்.
4.அந்த உணர்வினை நுகரும் உடலுக்குள் அந்த அணுக்களுக்கு இதை உணவாக கொடுக்கும்.
 
உயிரின் வேலை இது…!
 
இந்த உணர்ச்சிகள் கிளர்ந்த பின் எந்தக் கண்ணால் பார்த்துப் பதிவானதோ அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு அந்த உண்மையான உணர்வை எடுத்து அது உணவாகக் கொடுக்கும்.
 
வேதனைப்படுகின்றான் என்று உணர்த்தினாலும் வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்த பின் வேதனை உணர்ச்சியைத் தூண்டும் பொழுது
1.உயிரின் உணர்ச்சிகள் கண்ணின் அலையில் அனுப்புகின்றது. அந்த உணர்வை ஈர்க்கச் செய்கின்றது.
2.அந்த உண்மையான உணர்வைச் சுவாசிக்கச் செய்கின்றது. நமது இரத்த நாளங்களிலே கலக்கச் செய்கின்றது.
3.இப்படி அந்த வேதனைப்படுத்தும் அணுவிற்கு உணவாகக் கொடுக்கின்றது.
 
இயற்கையின் நியதிகள் இது.
 
ஆகையினால் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.
1.உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சத்தை உணவாகக் கொடுத்து
2.ஒளியான அணுக்களாக உருவாக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கும்படி சொல்கிறோம்.