ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 2, 2026

மதுவிற்கு அடிமையானவர்கள் மந்திரக்காரனின் கையில் சிக்கிப் பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்

மதுவிற்கு அடிமையானவர்கள் மந்திரக்காரனின் கையில் சிக்கிப் பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்


மது பானத்தை அருந்துபவர்கள் அதை அதிகமாக உட்கொள்ள உட்கொள்ள அந்த உணர்வின் செயலே அவர்களுக்குள் உள் நின்று கடவுளாக இயக்குகின்றது. அந்த மது இருந்தால் தான் அந்தக் கடவுளுக்கு அது உதவும். இல்லையென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
 
1.மதுவை அதிகமாக அருந்தி விட்டால் அதனின் உணர்வே அவருக்குள் அர்ஜுனனாக ஆகி
2.அதனின் நினைவாற்றலே சாரதியாக நின்று அதன் வழியே அவர்களை அழைத்துச் செல்லும்.
 
மதுவை அருந்த அருந்த அதனின் ஆற்றல் அதிகமாகி அதுவே அர்ஜுனன் ஆகி இந்த உணர்வு வலுவாகி உடலை விட்டு அகன்ற பின் யார் ஒருவர் இதே போல மதுவை அருந்துகின்றார்களோ அந்த உடலின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று அந்த ருசியின் தன்மையாக அங்கே கூட்டி அவர்களையும் அது வீழ்த்தும்.
 
இப்படி மனிதனுக்குள் மனிதன் சென்றாலும்…
1.மதுவை வைத்து மந்திரங்களைச் சொன்னால்
2.மதுவை அருந்தி வெளியே செல்லும் உயிரான்மாக்களை
3.எளிதில் மந்திரவாதிகள் கவர்ந்து கொள்வார்கள்.
 
கவர்ந்து கொண்ட பின் ஏவல் என்ற நிலைகள் கொண்டு… இவர்கள் மற்றவர்களைப் பயமுறுத்துவதும் மற்றவர் மீது பாய்ச்சி இயக்கச் செய்வதும் மற்ற தீமைகளுக்குப் பயன்படுத்துவதும் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள்.
 
மது அருந்துவோருக்குச் சரியான நினைவிருக்காது. மனிதன் நிலைகளே விலை பேசி நஞ்சுக்கு அடிமையானவர்கள் இந்த நிலையில் இருந்து அவர்கள் மீள்வது என்றால் கடினம்,
 
மந்திரக்காரன் கையிலே சிக்கிப் பல தீமைகளுக்கு அடிமையாகி நஞ்சின் தன்மை ஓங்கிப் பாம்பினமாகப் பிறக்கும் நிலை தான் வரும்.
1.சகல சர்வ வசதிகளும் இருந்தும்…
2.எவ்வளவு தூரம் இந்த மதுவை விரும்பி உட்கொள்கின்றார்களோ மனித வாழ்க்கையின் நிலை மறந்து
3.இருண்ட நிலைகளாக இதையே சொர்க்கமாக எண்ணி வாழ்வோர் உணர்வுகளில் அதுதான் கடைசி நிலை.
 
இந்த உடலை விட்டு அகன்ற பின் மதுவை வைத்து மாயங்களைச் செய்வோர் கையிலே சிக்கப்பட்டு அவன் எந்தெந்தத் தீய வழிகளுக்குச் செயல்படுத்துகின்றானோ அது ஏவலாகப் போய் அமையும்.
 
மது அருந்துவோர் மந்திரவாதிகள் கையில் எளிதில் போய்ச் சிக்கி விடுவார்கள். தீமையின் செயலுக்கே அது அடிமையாகும்.
 
பின் நஞ்சின் தன்மை வளர்ந்து விட்டால்… இந்த மனித வாழ்க்கையில் எதையும் ரசிக்க முடியாது நஞ்சினையே எப்படி ரசிக்கின்றோமோ அதைப் போல பாம்பினமாகப் பிறந்து மண்ணுளிப் பாம்பு போல இருந்து தன்னுடைய இரைக்காகச் சதா ஏங்கி ஏங்கி தன்னுடைய இரையைத் தேடித் தேடி அமைதியாக இருப்பதும் இரை வருவதைத் தன் உடலில் உள்ள நஞ்சினைப் பாய்ச்சித் தான் அதை உணவாக உட்கொள்ளும்.
 
தன் சக்திக்கு மீறிய நிலைகள் கொண்ட இரையை அது விழுங்கும். அப்படி விழுங்கிய ஆகாரம் உடலுக்குள் சென்று கரைவதற்கு முன் எத்தனை அவஸ்தைப்படுகின்றது…?
 
இதைப் போலத்தான் மது அருந்துவோரெல்லாம் மனித வாழ்க்கையில் அடுத்துப் பாம்பினமாகப் பிறப்பதற்கு தயாராகும் நிலை தான் அது மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வுகள் இதைத்தான் செயல்படுத்தும்.
 
மதுவை எளிதாக நினைக்கின்றோம் மனித நினைவையே அது இழக்கச் செய்துவிடும்.
1.எவ்வளவு ஞானம் இருந்தாலும் திறமைசாலியாக இருந்தாலும் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும்
2.நஞ்சிற்குக் கீழ் அடிமையாவது போல அந்த நஞ்சின் செயலாக்கங்கள் இவ்வாறே இருக்கும்.
 
மனித வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்து வந்தோமோ தீமைகள் அகற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு மனிதனாகப் பிறந்திருந்தாலும் மீண்டும் தீமைக்குள் சிக்கி விடுகின்றோம்.
 
இதைப் போன்ற உண்மைகளை எல்லாம் தெரிந்து இதிலிருந்து விடுபட அருள் மகரிஷிகள் அருள் சக்திகளைச் சேர்த்து அந்த நஞ்சினை அடக்கிடும் சக்தியாக நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழும் அந்த அருள் ஞான சக்தியாகப் பெற வேண்டும்.
 
1.இது போன்ற நஞ்சின் வலையில் நாம் சிக்காது
2.ஞானிகள் காட்டிய வழியில் நாம் வாழ வேண்டும்.