ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2025

“படியளக்கும் பெருமாள்…”

“படியளக்கும் பெருமாள்…”


காலத்தின் சுழற்சியில் ஓர் நாள் மாடி வீட்டு அரசன் மகள் பத்மாவதி தன் நாயகனை வரித்திட்ட செயல் மலைமுகட்டுக் குடிசையின் அருகில் உள்ள காட்டுப் பகுதியில் அச்சம்பவம் நடைபெற்றது.
 
கொங்கணவ மாமுனி தன் அவதார ஸ்ரீனிவாச காலத்தில் வீரன் போல் காட்டினுள் திரிந்து மனித மனச் செயலாய் சரீரத்தின் மதத்தினை கர்வத்தை வென்று காட்டி
1.காட்டினுள் மாமதமாய் எழும் யானையின் சரீரச் செயல் வழியிலும் அதை அடக்கும் ஆற்றல் காட்டி
2.மிருக மனத்தையும் வசீகரித்து நேசிக்க வைத்திடும் செயற்பாங்கு காட்டிய நிலையில்
3.பத்மாவதி மனத்தையும் தன் பால் ஈர்த்து தன் ரிஷி சக்திக்கு ரிஷி பத்தினியாக்கும் செயலும் நிகழ்ந்தது.
 
காட்டினுள் வனபோஜணம் உண்ண வந்த அரசனும் பரிவாரங்களும் ஸ்ரீனிவாசன் தன் அவதார இயல்பின் சூட்சுமம் கொண்டு இவர்கள் செயலைக் கவனிக்க அங்குள்ள யானை ஒன்று மதம் கொண்டு தழையறுத்துக் கொண்டு அனைவரையும் விரட்ட கூட்டமே கலகலத்து உயிர் காக்க ஓடி ஒளிய பத்மாவதியை விரட்டிக் கொண்டே தொடர்ந்து யானையும் வந்துற்றது.
 
அரசனும் அரசியும் வீரர்களும் கலக்கமுற ஸ்ரீனிவாசன் அருகே வந்த வகுளாம்பிகை ஆசி கூறி மகனை அனுப்பி வைக்க அவதார மகிமை முன் தொடர்பால் முன் சென்றான் ஸ்ரீனிவாசனும்.
 
குடிசையை நோக்கி ஓடி வரும் பத்மாவதி தஞ்சமென ஸ்ரீனிவாசனின் பின் மறையதாயைத் துதித்து முன் சென்ற ஸ்ரீனிவாசன் ஓர் கை உயர்த்தி நில்என யானையை அதட்டிட ஸ்ரீனிவாசன் குரலுக்கும் கண் பார்வை காந்த சக்திக்கும் கட்டுண்ட யானை மதம் நீங்கி மண்டியிட்டு அமர்ந்து கொண்டது.
 
ஸ்ரீனிவாசனை… தன் வாழ்க்கைத் துணை இவன்தான் எனத் தேர்ந்தெடுக்க காரணமாய் அமையலுற்றது அச்சம்பவம்.
 
1.கொங்கண மாமுனி தன் ரிஷிபத்தினி சக்தியை வளர்ச்சிப்படுத்தி
2.தாய் சக்தியின் மூல சக்தியாய்க் கலந்து
3.தன் அவதார விசேஷ குணத்தன்மை மனத்தைக் கொண்டு நடத்தியதே அடுத்து மற்றெல்லாம்.
 
இரு மனங்களும் சிவ சக்தியாய்க் கலந்துவிட்ட குணத்தின் வாசனையே நல்லறத்தின் செயலாய் இல்லறத்தில் மணமாய் பரிணமளிக்கும் தொடருக்கும் திருமாங்கல்ய மன வைபோகம் என்றெல்லாம் பெருமைப்படுத்திட்ட வாழ்க்கைத் துணை நலம் பேணும் செயலுக்குச் சக்தி பெற வந்த கொங்கணரும் எப்படி விலக்காக முடியும்…?
 
இல்லறம் ஏற்படும் செயலுக்கு மண எண்ண முடிவுரையைத் தெளிதல் அவசியம் எனும் பாங்கில் முறையாய் பெண் கேட்கும் படலத்தில் கொங்கணருக்குத் தரித்திரன்என்ற பட்டம் தான் வந்துற்றது.
 
அச்சொல்லின் விஷமம் அவர்தம் வைராக்கியத்தை மீண்டும் தூண்டும் தூண்டுகோலாய் அமைய வகுளாம்பிகை அம்மையும் புன்னகைத்து தனது அவதார மகிமை செயலுறும் தருணமும் இது தான் எனத் தெளிந்து தன் சரீர செயலும் உயிர் ஆன்ம சக்தி கொங்கண மாமுனியுடன் ஒன்றி வழிகாட்டிட எண்ணினார்.
1.எச்செயலுக்கும் வகுளாம்பிகையாய் வந்து பணி செய்து பயன்பெறும் மார்க்கம் காட்டிட்ட தாயாரம்மாள் என்கின்ற வகுளாம்பிகை
2.சரீரத்தை விட்டு உயிர் ஆன்மா சக்தித் தொடர் காந்தத்தை ஒளி சக்தியாக்கும் ரிஷியின் தொடரில் கலந்து ஒளி காந்தமாக்கி செயல் கொண்டிட
3.தான் எடுத்த ஸ்தூல சரீரத்தை விட்டொழித்துச் சூட்சுமமாய் செயல்படுத்திட முனைந்தாள் வாலாம்பிகை.
 
ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டது குடிசைக்கு முன்புறத்திலே…!
 
எந்தத் தாய் சக்தியை நேரிடையாய்க் கண்டு துதித்து வந்த ஸ்ரீனிவாச கொங்கணரும் தன் மனித குண சரீர கதிக்கு இயல்பாய் கலக்கம் கொண்டிட்டு கண்ணில் நீர் பெருக அப்பிண குழிக்கு மேல் படுத்து கலக்கமுறவே தாக்கியது ஓர் மின் காந்தம்…
1.மயக்கமுற வைத்து ஸ்ரீனிவாசனுள் ஒன்றித் தாய் சக்தியாய் கலந்து
2.ரிஷியின் சக்திக்கு மண்டலமாக்கிவிடும் தாய் சக்தியாய்ச் செயல்படத் தொடங்கியது.
 
இனி கொங்கணர் பெற்றிடும் பெரும் தவ செல்வ நாயகனாக்கி எச்செல்வம் பொன் பொருளாய் வேண்டினானோ "அம்மாடி வீட்டு அரசன்" தன் பெண் பத்மாவதியைக் கொடுக்க அம்மாடி வீட்டு அரசனே திகைக்க இக்கோடி வீட்டுப் புருஷன் கொங்கணரும் மாடி வீட்டு அரசனுக்கு நிகருக்கு மேல் செல்வம் பெறும் செல்வநாயக சூத்திரத்தை அம்மாமகரிஷி கொங்கணரே மனமுவந்து கூறினாலொழிய யாரறிவர் அச்சூட்சுமத்தை…?”
 
கூறுகின்றார் கூறுகின்றார் குறைவுபடாமல் கூறுகின்றார்…! தன் சுய சக்தி மட்டுமல்ல
1.தாய் சக்தியுடன் எந்த ரிஷிபத்தினி சக்தி தன் செயலுக்குச் சக்தியளிக்க மனத்தினால் எப்பொழுது வரித்ததோ
2.அக்கணம் முதலே தான் ஒரு குபேரன் என்று கூறுகின்றார்.
 
வறுமைப் பிணி களையக் குபேர சம்பத்து பெற்ற கொங்கணரும் குபேரன் என்ற சிறப்பு பெற்ற பின்னரே தான் அறிந்ததும் ஒன்று உண்டு. அதுவே படியளக்கும் பெருமாள்…”