கத்தியைத் தலை மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…! என்ற நிலை தான் இன்று இருக்கின்றது
வளர்ச்சி
அடைந்த நாடுகளில் எல்லாம் “நியூட்ரான்” குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அதை வெடிக்க
நேர்ந்தால் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு உலகம்
முழுவதுமே விஷத்தன்மையாகப் பரவும் நிலை வந்துவிடும்.
அது எந்த
விஷத்தன்மையோ… ஆடு மாடு மற்ற உயிரினங்களில் பட்டால் புது விதமான அணுக்களாக மாற்றிவிடும். மனித
உடலுக்குள் வந்தாலும் ஒரே இனமாக மாற்றிவிடும். உலகில் உள்ள
அனைத்து உயிரினங்களிலும் விஷம் கொண்ட அணுக்களாக மாறி விடுகின்றது.
1.இந்த
குண்டைச் செய்தவனும் (நாடு) சரி… எந்த இடங்களில் வீசுகின்றார்களோ அங்கேயும் சரி…
2.அது
காற்று மண்டலத்தில் பல லட்சம் மைல்கள் என்று கூடச் சொல்லலாம்…
3.அந்த விஷத்தன்மைகள்
பரவி ஊடுருவும் தன்மை பெற்றது.
இப்படிப்பட்ட
குண்டுகளை ஒருவருக்கொருவர்
வீசி விட்டால் தேடிய செல்வமோ… கௌரவமோ… இந்த நாட்டை ஆட்சி புரிகின்றேன் அந்த நாட்டைப் பிடிக்கப் போகின்றேன் என்ற நிலையில் அரசியல் சூழ்நிலைகளால் வரும் நிலைகளோ… “எங்கே போகும்…? எப்படிப் போகும்…?” என்று நிலை இல்லாது
போய்விட்டது.
அரசாங்க
உத்தியோகத்தில் இருப்போரும் சரி அரசியல் வாழ்க்கையில் இருப்பவரும் சரி மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவதாக எண்ணுகின்றார்கள்.
1.ஆனால்
ஒருவருக்கொருவர் உணர்வின் தன்மை
மாற்றப்பட்டு
2.குற்ற
இயல்பான உணர்வுகளை வளர்க்கும் தன்மையே வளர்ந்து விட்டது.
இப்படி வளர்ந்த
இந்த உலகம் “மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொள்ளும் உணர்வுகள்”
எல்லா நாடுகளுக்கும் தோன்றி விட்டது.
எல்லா
நாடுகளும் இதைப் போல நியூட்ரான் என்று குண்டுகளைத் தயார் செய்து
வெடிக்கச் செய்தால் எங்கே வெடிக்கின்றார்களோ எங்கே
உருவாக்கினார்களோ அனைத்து உயிரினங்களும் விஷத்தன்மையாக
மாறிவிடுகின்றது.
இவர்கள் தேடிய
விஞ்ஞானம் தன்னையே அழித்துக் கொள்ளும் நிலையாகத் தான் மாறுகின்றது.
1.கட்டிடங்கள்
அப்படியே இருக்கும் மரம் செடி கொடிகள் அப்படியே இருக்கும்
2.ஆனால்
தாவரங்களின் மரபு அணுக்களை மாற்றி
அமைக்கும் சக்தியாக வந்துவிடும்.
அதிலே விளைந்த பொழுது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் பொழுது… உயிர்
அந்த உணர்வினை நுகரப்படும் போது அந்த விஷமான உணர்வுக்கொப்ப
உணர்ச்சிகளை எழுப்புகின்றது.
நியூட்ரான்
என்ற உணர்வலைகள்
தாவரங்களில் எளிதில் ஊடுருவும் சக்தி பெற்றது. அவ்வாறு விஷத்தன்மையாக மாறி விட்டால் அந்த விஷத்தன்மை கொண்டதை உயிரினங்கள் நுகர நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட
அணுக்களாகத் தான் மாற்றும் தன்மை வருகின்றது.
இப்படி இந்த
உலகம் கூடிய சீக்கிரம் விஷத்
தன்மையாகப் பரவப்படும் பொழுது… மனிதனின்
சிந்தனை சக்தியை இழக்கப்பட்டு மனித உடல் மாறும் நிலை
வருகின்றது.
அப்படியே உடல்கள் இருந்தாலும்
விஷத்தன்மை கொண்ட செயலைச் செயல்படுத்தும் நிலையும்
சிந்தனையற்ற நிலைகளும் உருப்பெறுகின்றது.
உலகில் ஏற்படும் இத்தகைய நிலை…
1.கத்தியைத் தலைக்கு மேல் தொங்கவிட்டு எப்பொழுது அறுந்து விழுகும்…? என்ற நிலையில் தான் இன்றைய வாழ்க்கை இருக்கின்றது.
2.இதிலிருந்து நம்மைக் காக்க வேண்டும் என்றால்
3.தென்னாடுடைய
சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்லும்
4.அந்த அகஸ்தியனின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும்.
5.நம் ஆன்மாவிலே அகஸ்தியன்
உணர்வை வலுவாக்க வேண்டும்.