இன்றைய உடலின் கணக்கு எதுவாக இருக்க வேண்டும்...?
உதாரணமாக நாம் கோபப்பட்டு ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தொல்லை கொடுக்கிறோம் என்றால்… நாமே அசுர குணங்களை
வளர்க்கும் தவத்தை மேற்கொள்கின்றோம் என்று பொருள்.
நாம் எண்ணிய தவம் அனைத்தையும்
உயிர் அந்த உணர்வின் கருவாக இந்திரலோகத்தை மாற்றி அமைக்கின்றது.
1.மகிழ்ச்சியை மாற்றி நமக்குள் வெறுப்பு என்ற
உணர்வுகளும் எவரையும் கொன்று புசிக்கும் உணர்வே வருகின்றது.
2.இங்கே பிரம்மலோகம் அதன் உணர்வின் தன்மை வளர்க்க நேர்கின்றது.
3.சிவனும் அதன் வழிப்படி
வரம் கொடுத்து விடுகின்றான்.
4.ஆகவே மூன்று லோகத்தையும்
வென்றிட வேண்டும் என்று தான் இராவணனின் தவம் அமைகின்றது.
5.அந்தத் தவத்தின் பலன் கொண்டு இந்த உடலில் விளைந்து (வீழ்ச்சி அடைந்து) இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்திய பின்
6.அசுர உணர்வுகளை
உருவாக்கும் அணுவின் தன்மையாக வருகின்றது.
7.இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் புலியாகப்
பிறக்க நேர்கின்றது.
அப்படி உருவான பின் புலியின்
உயிரும் ஈசனே. அதன் இயக்கத் தொடரும் விஷ்ணுவே ஈர்க்கும் காந்தம் லட்சுமி.
அப்போது தீமைகளை
உருவாக்கும் பிரம்மத்தின் தன்மை அந்தப் பசியை அடக்கும் தன்மையாக அல்லது தன் பசிக்காக ஏங்கும் பொழுது
மற்றொன்றைக் கொன்று புசிக்கும் உடலாக
(அது பிரம்மமாக) மாறுகின்றது.
அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது அது சிவம் ஆகின்றது. ஆக
புலியின் உடலும் சிவமே அதன் உடலுக்குள் உருவாக்கும் அந்த இந்திரலோகத்தை மாற்றி அசுர உணர்வுகளை உருவாக்கும் உலகமாக மாற்றுகின்றது.
உயிரின் தன்மை விஷ்ணுவாக இருக்கின்றது
இயக்கம் ஈசன் ஆகின்றது. இதை எல்லாம் தெளிவாக
தெரிந்து கொள்வதற்குத் தான்
1.ஓர் உடலை விட்டு உடல்
மாறும் பொழுது ஒரு உடலில் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிர்
எவ்வாறு உருவாக்குகின்றது…?
2.அந்த உணர்வின் தன்மை கருவாக
எப்படி உருவாகின்றது…?
3.கருவான பின் ஏற்கனவே இருந்த
உடலை அது எப்படி நலியச் செய்கின்றது…?
4.உயிர் இந்த உடலில் எதனைச் சேமித்ததோ அதன் வழி வெளிவந்த பின் அதற்குத்தக்க உணர்வை
நுகர்ந்து
5.உடல்களை எப்படி மாற்றுகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
இது தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்ட்டி
இருப்பார்கள். சாதாரண மக்களும் நாம் புரிந்து
நம் வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று என்பதனைக் கற்பிக்கின்றது நம் சாஸ்திரங்கள்.
நந்தீஸ்வரன் என்றால் ஒரு கோபப்படும்
உணர்வை நுகர்ந்தால் உயிருக்குள் பட்டு
அந்த உணர்வின் தன்மை உருவாக்குகின்றது.
உருவாக்கிய பின் அதே கோபத்தின் உணர்வு மீண்டும் இந்த உடலுக்குள் அணுவின் தன்மை
அடைந்து கோபத்தை உருவாக்கும் உணர்வின் அணுவாக
விளைகிறது.
அப்பொழுது அதனுடைய தன்மையை அது உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.. அது தான் நந்தீஸ்வரன்
சிவனுக்குக் கணக்குப்பிள்ளை.
இந்த வாழ்க்கையில் கோபத்தின் தன்மை
அதிகமாக்கினால் அதன் உணவின் தன்மை கொண்டு இப்படி நிகழ்ந்து விடுகின்றது.
அதே சமயத்தில் கோபம் வரும் பொழுது
“தந்திரமாக மற்றவர்களை ஏமாற்றிச்
சென்றால் அதன் உணர்வின் தன்மை நரியாகப் பிறக்கச் செய்கின்றது…”
இதைப் போல எந்தெந்த உணர்வின் தன்மையை நமக்குள் மாற்றி
அமைக்கின்றோமோ அதன் உணர்வுக்கொப்ப மனிதனாக இருப்பதை இந்த
உயிர் மாற்று உடலை அமைத்து விடுகின்றது.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.