வெறும் வாயிலே சொல்லி முன்னோர்களை விண் செலுத்த முடியாது
குருநாதர் காட்டிய அருள் வழியை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். அதன்படி முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்களை
நீங்கள் விண் செலுத்துதல் வேண்டும்.
தற்காலத்தில்… ஒன்றிலிருந்து
48 நாட்களுக்குள் உடலை விட்டு யாராவது பிரிந்து இருந்தால்
அந்த ஆன்மாக்களையும் பௌர்ணமி காலங்களில் அவர்கள் பெயரைக்
குறித்துச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரையச் செய்து பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
1,நாம் அனைவரும் மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏகக்காலத்தில்
ஒன்று சேர்ந்து
2.அந்த வலிமையை ஏற்றிக்
கொண்டு முன்னோர்களை விண் செலுத்துதல் வேண்டும்…
சப்தரிஷி மண்டலத்திற்கு உந்தித் தள்ள வேண்டும்.
அப்படி இல்லாது மோட்சம் அடைய மார்க்கம் வேறு இல்லை. அதை நமக்குள் வளர்த்தால் தான் அந்த வழியிலே
நாம் அனுப்ப முடியும்.
ஒரு ராக்கெட் விஞ்ஞானிகளால்
உருவாக்கப்பட்டது என்றாலும் “உந்து
விசையால் தான்” மேலே விண்ணுக்குச் செல்லுகின்றது. உந்திச் சென்ற
பின் அதனுடைய எல்லையை அடைகின்றது. பின்
அங்கிருக்கும் உணர்வுகளைக் கவர்ந்து தரை மார்க்கத்திற்கு
அனுப்புகின்றது.
இதைப் போன்று தான் முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பி அங்கிருந்து அருள்
ஒளியின் சக்தியை நாம் இங்கே எளிதில் பெற முடியும்.
சாதாரணமாக வெறும் வாயில் சொன்னால் அவர்கள்
விண் செலுத்த முடியாது.
1.அந்த அருள் ஞானத்தின்
உணர்வை உங்களுக்குள் முதலில் போதிக்க வேண்டும்.
2.உங்களுக்குள் அந்த
நினைவாற்றலைப் பெருக்குதல் வேண்டும்
3.அதை ஏங்கித் தியானித்தல் வேண்டும்…
4.அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உயிரான்மாக்களை
விண்ணுக்கு அனுப்ப முடியும்.
இருந்தாலும் இதற்கு முன் செய்யத் தவறி இன்னொரு மனித
உடலில் அவர்கள் இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து நாம் இந்த வரிசையிலே செய்து வந்தோம் என்றால்
1.அந்த உடலை விட்டு
எப்பொழுது வெளி வந்தாலும்
2.அதன் துணை கொண்ட நாம்
இதைப் போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தினால் விண் செலுத்த முடியும்… ஒளிச் சரீரம்
பெறச் செய்யலாம்.
3.அதன் துணை கொண்டு நாம் அந்தச் சக்திகளை எளிதில் பெறலாம்.
பெற்று… குடும்பத்தில்
வரும் தீமைகளை அகற்றிவிட்டு அருள் ஞானிகள் உணர்வு துணை கொண்ட
நாம் எந்த நேரம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்மை அங்கே
அழைத்துச் செல்லும் உயிர்.
நம் முன்னோர்கள் முதலில் விண்
சென்றால் தான் அந்த உணர்வின் வலு கொண்டு
நாமும் அந்த வலுப்பெற்று விண் செல்ல முடியும். அதற்குத்தான் மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
இதன் துணை கொண்டு எண்ணி ஏங்கி
முன்னோர்களின் ஆன்மாக்களை விண்
செலுத்துங்கள் அந்த எல்லையை அடையச் செய்யுங்கள் உடல் பெறும்
உணர்வை அங்கே கரையச் செய்யுங்கள்.
இதன்படி செய்தால் பேரின்ப வாழ்க்கையாக வளரும்… அப்படி நீங்கள் வளர வேண்டும்…
அதை நீங்கள் பெற வேண்டும் மூதாதையர்கள் அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிப்பது.
கூட்டமைப்பாகத் தியானிக்கும் வழிகளில்
1.மெய் ஞானிகளின் உணர்வுகள்
அனைத்தும் உங்கள் இரத்த நாளங்களிலே அந்த உணர்வின் அணுக்கருக்களாகப் பெருக்கச் செய்கின்றோம்.
2.அப்படி அணு கருக்களாக உருவாக்கி அந்த நினைவாற்றலை மீண்டும் வளர்த்து
விட்டால்
3.அந்த அணுக்கள் விளைந்து
உங்களுக்குள் பேரின்ப பெரு வாழ்வாக வாழச் செய்யும்.
மனித வாழ்க்கையில் என்றும் பிறவியில்லா நிலையை அடைய உங்களுக்கு இது உதவும்.