ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2025

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்

பிறருக்கு நன்மை செய்தாலும்… தீமை நமக்குள் ஏன் வருகிறது…? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் உரைகளைத் தான் உங்களுக்குப் போதித்து வருகின்றோம் அதை நீங்கள் தெளிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் செம்மையான பாதையினை அமைத்துக் கொள்ள அதற்குண்டான பக்குவங்கள் வரும்.
 
இது தீமை இது நன்மை என்று சொல்லும் பொழுது
1.தீமை என்ற நிலைகளை விலக்கி விட்டுச் சென்றால் தீமை வருவதில்லை.
2.நன்மை பயக்கும் இடங்களுக்குச் சென்றால் அந்த நன்மையே வலிமையாக அது உங்களை அழைத்துச் செல்லுகின்றது.
 
இதைப் போன்று தீமை நன்மை என்றும் உணரும் நிலைகளில் நீங்கள் எதனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று சற்று சிந்தியுங்கள் உங்கள் சிந்தனைக்குரியதாக இதை விட்டு விடுகின்றேன்.
 
இன்று நமக்கு ஞானத்தைப் போதிப்பவர்களில் புகழ்வதற்கும் போற்றுவதற்கும் தான்சீர்வதிக்கின்றார்கள். புகழுக்காக ஏங்குகின்றார்கள் போற்றுவதற்கு ங்குகின்றார்கள்.
 
நாம் போற்றித் துதிக்கவில்லை என்றால் இவன் ஏதோ பழித்துப் பேசுகின்றான்…! நம்முடைய தெய்வங்களுக்கும் கொள்கைகளுக்கும் விரோதமானவன்…! என்று குறை கூறி மாயக்காரன் என்றும் மாயா ஜாலக்காரன் என்றும் மதிக்கக் கூடியவன் அல்ல என்றும் அசுர குணங்கள் கொண்டவன் என்றும்
1.உண்மையின் உணர்வுகளை அறியாது உண்மையின் உணர்வை அறியச் செய்தாலும் அதைப் போதிக்கும் ன்மைகள் இழக்கப்பட்டு
2.மனிதனின் வாழ்க்கை ஞானிகள் உணர்வைத் தனக்குள் பெருக்கும் நிலையை இழக்கச் செய்துவிட்டார்கள்.
 
ஆக யாரையும் நான் குறை கூறவில்லை அவர்கள் அறிந்தார்களோ இல்லையோ…! மெய் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
 
பிறருக்குத் தர்மம் செய்ய விரும்புவோர்
1.வேதனைப்படுவோர் உணர்வை நுகர… அந்த வேதனையான அணுக்கள் உடலுக்குள் புக
2.இந்த இந்திரலோகத்திற்குள் (இரத்த நாளங்கள்) நன்மை செய்யக்கூடிய நிலைகள் இழக்கப்படுகின்றது
3.எம்மா எப்பா…! என்று வேதனையைத் தான் வளர்க்க முடியும்.
 
அப்பொழுது தன்னுடைய திசைகள் எங்கே செல்கின்றது…? அதற்குப்பின் தர்மம் செய்யப் போகின்றாரா…?
 
எல்லோருக்கும் நன்மை செய்தேன் என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் பேசுகின்றார்கள் தவிர
1.எதனால் இது வந்தது என்று அறிய வாய்ப்பினைக் கொடுத்தாலும் அதை அறியாத வண்ணம் காலத்தால் மறைந்தே சென்று விட்டது.
2.அதைத்தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.
3.அருள் ஞானிகள் உணர்வைப் பதிவாக்குகின்றேன்நினைவு கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
தீமைகள் எப்படிப் புகுகிறது…? உங்களுக்குள் அறியாது புகும் அந்தத் தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் அதை மாற்றும் வல்லமை உங்கள் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று தான் உணர்த்துகின்றேன்.
 
ஆகவே ஆறாவது அறிவின் துணைனை கொண்டு அருள் ஞானிகள் உணர்வுகளை நுகருங்கள். அதை உங்களுக்குள் சிருஷ்டி ஆக்குங்கள். உங்கள் ரத்த நாளங்களில் பெருக்குங்கள். தீமைகள் வராது தடுக்க இது உதவும்.