“உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக” ஒளி நிலை பெற வேண்டும்
நமது உயிரில் (புருவ மத்தியில்)
1.அது கூர்மையாக ஈர்க்கும் இடங்களில் அது சேமித்து சேமித்து வைரத்தைப்
போன்று கற்கள் உருவாக்கும் நிலை வருகின்றது.
2.நரிக்குக் கொம்பு என்று சொல்வது போன்று நமக்குள்ளும் இது உறைகின்றது
3.அந்த உணர்வுகள் விளைந்து விட்டால் அதுவே வைரமாக மாறுகின்றது.
கடந்த காலங்களில் 200 வருடம்
300 வருடம் ஆகியும் மனிதர்கள் இறக்கவில்லை என்றால்
அவர் உடலில் சேமிக்கப்பட்ட உணர்வுகள் மண்டை ஓட்டிலே எடுத்துக் கொண்டால் “வைரங்கள்”
அங்கே விளைந்திருக்கும்.
எந்த நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றார்களோ அந்த உணர்வின் தன்மை தனக்குள் நுகர்ந்து அவருக்குள் உறையப்பட்டு வைரமாக ஜொலிக்கின்றது.
கடந்த கால நிலைகள் இப்படி உண்டு.
குருநாதர் இமயமலைச் சாரலுக்கு எம்மை அழைத்துச் சென்று
1.அங்கே புதையுண்டு
உடல் அழியாது இருந்த பல நூறு வருடங்கள் வாழ்ந்த
2.அக்கால மனிதர்கள் உடலில் பிளந்து
காட்டுகின்றார் இந்த வைரங்களை.
காடு மேடெல்லாம் அலையச் செய்து தான் இந்த பேருண்மைகளைக் காட்டுகின்றார்.
மனிதனான பின் இத்தகைய உணர்வுகளை நுகர்ந்து உயிரோடு ஒன்றி வளர்ச்சி பெற்று அது
வைரமாக விளைவதையும் காட்டுகின்றார்.
நட்சத்திரங்கள் ஜொலிப்பின் தன்மை பெற்றாலும்
கார்த்திகை நட்சத்திரம் ஜொலிப்பான
நிலைகள் நீலம் கலந்த வெளுப்பு நிறமாக இருக்கும்.
ரேவதி நட்சத்திரம் மஞ்சள் கலந்த நிறமாக இருக்கும்…
கோமதேகம் போன்ற உணர்வுகள் உருவாகும்.
இப்படி 27 நட்சத்திரங்களில் இருந்தும் வைரக்கற்கள்
உருவாகின்றது. சில நட்சத்திர கலவைகள் அணுக்களாக மாற்றப்படும்
பொழுது வைரங்களின் ரூபங்களும் மாறும்.
இதைத்
தெளிவாக்குகின்றார்
குருநாதர்.
மனித உடலுக்குள் ஒவ்வொரு தாவர இனங்களும்
ஒவ்வொரு நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்தே உள்ளது.
அந்தக் குணத்தை அது சிறப்பிக்கின்றது.
இருந்தாலும்…
அந்த விஷம் தோய்ந்த அணுக்களின் தன்மை… “எந்த
நட்சத்திரத்தின் தன்மை கொண்டு உயிரின் தன்மை இயக்குகிறதோ” அதனின் தன்மை கொண்டு வைரமாகவே பின் நாட்களில் மாற்றுகின்றது.
இமயமலைச் சாரலுக்கு அழைத்துச் சென்று தொடர் வரிசையாக
குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.
ஆனால் மறைந்திருக்கும் வைரத்தைக் காட்டினால் ஆஹா…! என்று பெருமைப்படுவதும்… அதனால் பயனில்லை என்றாலும் அதை எடுத்து வந்து கிரீடங்களிலே வைத்து வீட்டில் பெட்டிக்குள் வைத்து பூட்டிக் கொள்வதும்…
1.“நான் வைரத்தை வைத்துள்ளேன்” என்று பெருமை பேசும் நிலைகளுக்குத் தான் அதைக்
கொண்டு செல்கின்றோம்.
2.உணர்வின்
தன்மை உயிரின் ஒளியின்
ஜொலிப்பாக மாற்ற வேண்டும் என்ற
எண்ணங்கள் நமக்கு வருவதில்லை.
இந்த உடலின் இச்சையும் நம்மை மற்றவர் போற்றும் நிலைக்காகப் பல ஆடம்பரப் பொருள்களைச் சேர்த்து… பிறர் மெச்ச வேண்டும் போற்ற வேண்டும் என்ற இந்த ஆசைகள் தான் தூண்டுகின்றது.
அவர்கள் போற்றத் தவறினால் பகைமைகளை உருவாக்கி விடுகின்றது… அதற்குப்
பின் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது.
சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இயற்கையின் இயல்புகள் நம் உயிர் எவ்வாறு
மாற்றுகின்றது…? என்ற நிலைகளைத் தெளிவாகத்
தெரிந்து கொண்டால் இந்த உடல் நமக்குச்
சொந்தமில்லை என்பதை உணரலாம்.
நாம் அணிந்திருக்கும் அணிகலன்களும் ஆடைகளோ
நமக்குச் சொந்தம் ஆகின்றதா…? ஆடம்பர அலங்கார வீடுகள் நமக்குச் சொந்தமாகின்றதா…? அழகாக வளர்த்த இந்த உடல் சொந்தமாகின்றதா…?
வேதனைகள் அதிகமாக உருவாகிவிட்டால் அதற்குள்
மடிகின்றது… உடல் குறுகுகின்றது… வேதனைகள் வளர்கின்றது… நல்ல ஆடைகளை அணியும் திறனும் இழந்து
விடுகின்றோம். நல்ல ஆடைகளைக் கண்டால் சீ…! வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுகின்றோம்.
எப்போது…?
அதை உடல் ஏற்றுக் கொள்ளாத நிலை வரும் பொழுது
இப்படி ஆகி விடுகின்றது. கடைசியில் பணம் இல்லாத நிலை
ஆகிவிடுகின்றோம் இதைப் போன்ற உணர்வு
எவ்வாறு வளர்கிறது என்று குரு காட்டுகின்றார்.
ஆகவே நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்…?
1.உயிரின் மீது இசைப்பட வேண்டும்
2.உயிரோடு ஒன்றி ஜொலித்திடும் நிலையாக ஒளி நிலை பெறுவது மனிதனின் முதிர்வு நிலை.