ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2025

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்

ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்


அன்று சப்தரிஷிகளாக வாழ்ந்தவர்கள் அவரில் கண்டறிந்த உணர்வுகள் தெளிந்த உணர்வுகள் அவர்கள் உடலில் விளைந்ததை சொல்லின் மூலமாகவும் செயல் வடிவிலும் வெளிப்படுத்திய
1.அந்தப் பேரருள் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு
2.அந்த அருள் உணர்வுகள் வான் வீதியில் நம் பூமியில் பரமாக இருக்கின்றது
3.பரமாத்மாவாகக் கலக்கப்பட்டுள்ளதுத்தின் ஆன்மாவாக.
 
தாவர இனங்கள் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து செடிகளாக விளைந்தாலும் அதனின்று வெளிப்படும் சத்து அதுவும் இந்தப் பரமாத்மாவில் தான் கலந்துள்ளது.
 
அந்தந்தத் தாவர இனங்களில் விளைந்த வித்துகளை எடுத்து நிலத்திலே ஊன்றப்படும் பொழுது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு ன் ன் தாய் செடியின் சத்தினைக் கவர்ந்து அதன் வழி வளர்ந்து அதன் உணர்வுகள் குணங்கள் அனைத்தும் விளைந்து மீண்டும் தன் தன் இனத்தின் வித்துகளை உருவாக்குகின்றது.
 
இதைப் போன்று தான் சப்தரிஷிகள் தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாக ஆன அவர்கள் உடலிலிருந்து வெளிவந்த உணர்வுகள் அனைத்தும் இங்கே பரமாத்மாவாக இருக்கின்றது.
 
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் எமக்கு அருளிய அருள் வழிப்படி யாமும் கண்டுணர்ந்து
2.அருள் உணர்வை எமக்குள் வளர்த்துச் சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்தும் போது இந்த பரமாத்மாவில் இதுவும் படர்கின்றது.
3.சொல்லப்படும் பொழுது எவரெவர்கள் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
4.கவர்ந்த உணர்வுகள் வித்தாக அவர்களுக்குள் பதிவாகின்றது.
 
நிலத்திலே எப்படிப் வித்துக்களைப்ண்படுத்தி அதைச் சீராக வளர்க்கின்றோமோ இதைப்போல மகரிஷிகளின் உணர்வலைகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் ஞான வித்தாக இப்பொழுது பதிவு செய்கின்றேன்…”
 
நீங்கள் எந்த அளவிற்கு அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ அந்த அளவிற்கு அது பதிவாகி விடுகிறது. அப்படிப் பதிவான நிலையை நினைவு கொண்டு மீண்டும் கவர்ந்தால்
1.ருள் ஞானிகள் பெற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
2.வளர்த்த உணர்வின் தன்மை கொண்டு உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்ற முடியும்.
3.சப்தரிஷிகள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து எப்படி வாழ்ந்தனரோ
4.பிறவியில்லா நிலை என்னும் நிலையை அடைந்தனரோ அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.
 
குருநாதர் எப்படிப் உண்மைகளை அறிந்துணர்ந்தாரோ அதனை எமக்குள் பாய்ச்சி அதன் வழின்னிலிருந்து வெளிப்படும்படி செய்தாரோ அதே வழிப்படியே உங்கள் அனைவருக்கும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் அறியாத சேரும் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றேன்.
 
நீங்கள் வளர்க்கும் அந்தப் பேரருள் உணர்வுகள் பரமாத்மாவிலே பரவுகின்றது.
1.இங்கே வாழும் மக்கள் அனைவரும் அவரவர்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட இருளை அகற்றி அருள் வழி அனைவரும் வாழ்ந்திடவும்
2.எத்தனை கோடிச் சரீரங்களில் அதை எல்லாம் கடந்து இந்த உயிர் இன்று மனிதனாகக் கொண்டு வந்ததோ
3.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி ஒளிச்ரீரம் பெறுவதே
4.அதாவது ஞானிகள் பெற்றதைப் போன்று ஒளிச் சரீரம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய தியானம்.
 
இங்கே இப்போது பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதுவே தியானம் ஆகின்றது.