ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2025

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி


உதாரணமாக ஒருவர் திட்டினால் காதிலே கேட்கின்றோம் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது உணர்ச்சிகள் ரத்தத்திலே கலக்கிறது. அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது ரத்தக் கொதிப்பு வருகிறது
 
அதே போல உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம்… அதை நுகர்ந்தறிந்து உதவி செய்கின்றோம். அவருடைய வேதனையை அறிந்த பின் அந்த உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது. கருவாகி உருவாகிக் கடும் நோயாக நமக்குள் மாறுகின்றது. மனிதனுடைய சகஜ வாழ்க்கையாக இது மாறுகின்றது.
 
ஆனால் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க
1.கூட்டு தியானங்கள் இருந்து துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று
2.ஆயிரக்கணக்கானவர்களின் சக்தி வாய்ந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
3.ஒவ்வொருவருடைய செவிகளிலும் இது பட்டு கண்ணின் கருவிழியால் பதிவாக்கி
4.இந்த உணர்வின் ஈர்ப்பு காந்தமான கண்ணின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு உங்கள் உயிரிலே மோதப்படும் பொழுது அரங்கநாதன்…!
5.அத்தனை பேரின் உணர்ச்சிகளும் உங்கள் உடலிலே தீமைகளை நீக்கிடும் உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
6.இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலிலே அரங்கநாதனாக இருந்து கடும் நோய்களையும் நீக்கும் சக்தி பெறுகின்றது…”
 
அருள் உணர்வுகள் உங்கள் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாக தீமைகளை நீக்கிடும் வலுக்கொண்ட உணர்வின் அணுவாக உருவாக்க இது உதவுகின்றது.
 
ஆகவே கூட்டுத் தியானத்தின் மூலம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கும் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகிறது.
 
சர்வ பிணிகளையும் நீக்கிடும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெறும் தன்மையும் இந்த வாழ்க்கையில் பெற்று நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தீமைகள் புகா சக்தியும் நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
 
அத்தனை பேரும் சேர்த்த உணர்வுகள் ஒவ்வொரு செவிகளிலும் பட்டு இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நாம் எல்லோரும் நலமும் வளமும் பெறுகின்றோம்.
 
1.கூட்டமைப்பாக உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது எல்லோருக்குள்ளும் இது ஊடுருவி ரத்த நாளங்களில் குவிக்கின்றது.
2.சர்வ நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
 
ஆனால் நோயுடன் இருப்பவரை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் நமக்கும் நோய் வருகிறது. அதற்குப் பதிலாக அருளைப் பெருக்கி இருளைப் போக்க வேண்டும் என்ற உணர்வுகளை இதைப் போல கூட்டமைப்பாக நுகரப்படும் பொழுது
1.தீமையை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெறுகின்றோம்
2.மன வலிமை பெறுகின்றோம் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்குகின்றோம்.
 
இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லப்படும் பொழுது நமது வாழ்க்கை சீராகச் செல்ல ஏதுவாகின்றது. இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைகின்றோம்.