நாரதன் கலகப்பிரியன்… கலகமோ நன்மையில் தான் முடியும்
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… ரிஷி என்று சிருஷ்டித்துக் கொண்ட உணர்வாக… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வைத்தான் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.
அதைத் தான் ரிஷியின் மகன்… நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வார்கள்.
1.அதை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து…
2.யார் தீங்கு செய்கின்றார்களோ அவர் உடலில் அது படர வேண்டும் அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை நமக்குள் எடுத்தால்
5.பையன் மீது பிடிவாதமாக இருக்கும் உணர்வுகளை மாற்றி அவன் மீது இருக்கும் வெறுப்பினை மாற்றி அமைக்கின்றது.
நாரதன் கலகப் பிரியன்… ஆனால் கலகமோ நன்மையில் முடியும்.
நாம் பிடிவாதமாக இருக்கின்றோம். மற்றவரிடத்தில் எல்லாம் என்ன சொல்வோம்…? என் பையன் சேட்டை செய்து கொண்டேயிருக்கிறான் என்போம்.
அவன் நல்லது தானே செய்கிறான் என்பார்கள்.
நீங்கள் ஒரு பக்கத்திலே…! அவன் செய்யும் குறும்புத்தனம் இன்னது தான் என்று சொல்ல முடியாது. எப்போது பார்த்தாலும் வம்பு இழுத்துக் கொண்டே வருவான் என்று நாம் பிடிவாதமாக இருப்போம்.
அப்போது அந்த அருள் உணர்வை எடுத்துக் கொண்டால் நாரதனாகி கலகப் பிரியனாக இருந்து செயல்படும்.
1.என் பையன் நல்ல நிலையில் வர வேண்டும் எல்லோரும் போற்றும் நிலையாக அவன் வரவேண்டும்…
2.நல்ல உணர்வுகளைச் சிந்திக்கும் திறன் வேண்டும் என்று அதிகாலையில் அந்தச் சக்தியை எடுத்து
3.பையனுடைய தீமை செய்யும் உணர்வுகளை அடக்கும்படி செயல்படுத்தும்.
அடக்கி அவன் நல்ல நிலையில் வர வேண்டும் எண்ணினால் அவன் மீது அந்த வெறுப்பு வராது. இப்படிப் பாய்ச்சப்படும் போது நம்முடைய பிடிவாத குணத்தை நீக்கி விடுகின்றது. நமக்கு நன்மை ஏற்படுகிறது.
நாம் எடுத்துக் கொண்ட அந்த அருள் ஒளியின் உணர்வு குருக்ஷேத்திரப் போராகி இரண்டுக்கும் போர் வரப்படும் போது தீமை என்ற உணர்வினை அடக்கும் தன்மை வருகிறது… பையனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வு வருகின்றது.
உதாரணமாக நண்பன் நன்மை செய்தான் என்று எண்ணினால் விக்கலாகிறது… துரோகம் செய்தான் பாவி என்று எண்ணினால் புரை ஓடுகின்றது.
அதே போல் “பாசத்தால்” தாய் பையனை எண்ணி…
1.அவன் சுட்டித்தனம் செய்கின்றான் என்று எண்ணினால்
2.அவனைச் சிந்தனை செய்ய விடாதபடி மீண்டும் குற்றவாளியாகத் தான் ஆக்க முடியும்…
3.அவனை நல்லவனாக மாற்ற முடியாது.
ஆகவே அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தீமையை மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவன் எல்லோரும் போற்றும் தன்மைக்கு வர வேண்டும் என அடிக்கடி சொல்ல வேண்டும்.
இந்த உணர்வு உங்கள் உடலிலே படரும் போது உங்களுடைய பார்வை அவன் திருந்த வேண்டும் என்று செயல்படுகின்றது அதற்குத் தகுந்த சொல்லும் வருகின்றது. அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அவனை மாற்றும் நிலைகளாக வரும்.
இப்படித்தான் அவனை மாற்ற வேண்டும்.
இந்தப் பக்குவ நிலை பெறுவதற்குத் தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி எடுக்கும்படி சொல்லி அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று யாம் உபதேசிப்பது.