ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2025

விஷ்ணு தனுசு

விஷ்ணு தனுசு

 
பரசுராம் மனித உடலைப் பெற்ற பின் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றினாலும் ஒருவன் தீமையான இடைஞ்சல்களைச் செயல்படுத்தும் போது அதை நுகர்ந்த பின்… அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அது அணுத் தன்மையாக ஆகி விட்டால் இதில் விளைந்த உணர்வுகள் என்ன செய்யும்…?
 
ஒருவர் மீது எதிரியாகி விட்டால் எப்படியும் தாக்க வேண்டும் என்று தான் எண்ணம் வரும் அவரை வீழ்த்த வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்று சமப்படுத்தும் நிலை வரும் பொழுது பரசுராமனுக்கும் ராமனுக்கும் போர் முறை வருகின்றது.
 
ஆனாலும் அதிலே ராமன் தான் ஜெயிக்கின்றான்.
 
1.காரணம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நாம் நுகர்ந்து
2.இந்த உணர்வினைத் தனக்குள் எடுத்து உருவாக்கி அதைத் தனுசாகத்  தன் உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அந்த வேதனையான உணர்வுகளைத் தாக்கி அதை அழிக்கின்றது.
 
அதைத் தான் ராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்
1.உயிரின் உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தினை எண்ணித்
2.தன் உடலுக்குள் இருக்கும் தீமைகளை மாற்றும் சக்தி பெறுகின்றது என்று காட்டுகின்றார்கள்.
 
தீமையை அப்படியே விட்டுவிட்டால் அந்த உணர்வின் தன்மை ஆக்கிரமிப்பு “வாலி என்ற உனர்வு நமக்குள் வந்து” தீமை என்ற நிலைகள் அந்த வீரிய உணர்வு கொண்டு தனுசாக மாறி நமக்குள் தீங்கு செய்யும் எண்ணங்களையே உருவாக்குகின்றது.
 
அதனால் தான் அதைச் சிவ தனுசு என்று காரணப்பெயர் வைத்து சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள
1.தனது வாழ்க்கையில் எவ்வாறு அது நம்மை இயக்குகின்றது எப்படி இயக்குகின்றது…?
2.நாம் இயங்குகின்றோமா…? அல்லது நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்று உணர்த்துகிறார்கள்.
 
ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா…! தீமை என்று தெரிந்து கொண்டாலும் அது உடலுக்குள் புகாது சேனாதிபதியாக பாதுகாப்பாக இருக்கும் இந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்.
 
தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து அதை உயிரிலே சேர்க்கப்படும் போது தான்” விஷ்ணு தனுசாக மாறுகின்றது.
 
ந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எங்கள் உடல் முழுவதும் வளர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
1.நம் உடலில் தீங்கு செய்யும் இந்த அணுக்களுக்குள் ஊடுருவி
2.தீங்கான உணர்வைக் ராதபடி அதை அடக்குகின்றது.
 
விஷ்ணு தனுசு கொண்டே தீமை என்ற உணர்வினை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும் என்பதைத் தான் ராமாயணக் காவியங்கள் உணர்த்துகின்றது.
 
அதாவது வாலி (தீமைகளை) என்ற நிலையைக் குகையிலிருந்து வெளி வராதபடி அடைத்து அதனின் செயலைத் தடுக்க வேண்டும்” என்று காட்டுகின்றனர்.