ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2025

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா

யாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் “மெய் வித்துக்களே” இந்தக் கலியில் தேவையப்பா


மனிதன் என்றே பெயர் பெறும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து மனித குலச் சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால் சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”
 
1.உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும்…! என்று ஏற்கனவே படிப்படியாகக் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.
 
இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.
 
அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு...! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.
 
தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.
 
திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்... தாயும் தேடுகிறது...! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம் தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?
 
மகன் சிரித்துவிட்டு இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.
 
தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.
 
ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை எமது விளையாட்டு என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)
3.”நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான் உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா.
 
மறு சமைப்பைப் பற்றி வினா எழுப்புகின்றாய்
 
ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).
 
கண்டத்தில் எழுப்பும் ஒலிஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.
 
கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.
 
பரிணாம தத்துவப்படி கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.
 
1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் தன் சுவாசத்தைக் கொண்டு தன்னைத்தான் காத்துக் கொள்ளும்…”
 
அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.