ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2025

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை

உயிர் இயக்கினாலும்… ஆணையிடும் சாதனம் சிறு மூளை


உதாரணமாக ஒரு விஷம் கொண்ட தேளினை நாம் அடித்துக் கொன்று விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் உற்றுப் பார்த்துத் தான் அதை அடித்தோம் இருந்தாலும் அது எப்படி வேதனைப்பட்டதோ சூரியன் காந்த சக்தி கவர்ந்த அந்த விஷமான உணர்வலைகள் கரு முட்டைகளாக நம் ரத்த நாளங்களில் பரவிச் சுழலத் தொடங்கி விடுகின்றது.
 
நம் ரத்தம் போகும் பாதை எல்லாம் சுழன்று செல்லும் காற்று மண்டலத்தில் தூசிகள் எப்படிச் சுழல்கின்றதோ ரத்த நாளங்களில் அது ஊடுருவி மிதக்கும்.
 
அதாவது…
1.தரையிலே சக்கரம் வைத்து வாகனங்களை ஓட்டுகிறோம்
2.கடலிலே துடுப்பை வைத்துப் படகினைத் தள்ளுகின்றோம்
3.நீருக்குள் ஓடுவது போன்று இங்கே காற்றலைகள் படர்கின்றது… இரத்த நாளங்களில் அந்த அணுக்கள் சுழல்கின்றது.
4.இப்படிச் சுழன்று வந்தாலும் சுழற்சியின் தன்மையில் எந்த உறுப்புகளின் மீது மோதி அங்கே தேங்கி நிற்கின்றதோ அதற்குள் ஒட்டுகின்றது.
 
முட்டையைக் கோழி அடைகாக்கும் பொழுது அதனின் பருவமான பின் ஓடை விட்டு குஞ்சு எப்படி வெளி வருகின்றதோ அதைப் போன்று
1.இரத்த்த்தில் கருமுட்டையாக இருக்கும் விஷத்தை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
2.அந்த அணுவின் தன்மை நம் உடல் உறுப்பின் பாகத்தில் ஒட்டிக் கொள்கின்றது
3.பின் அந்த விஷத்தின் தன்மை நுகர்ந்து தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.
 
தேள் கொட்டினால் எவ்வளவு விஷமோ எப்படிக் கடுகடுக்கின்றதோ இதைப் போல கடுகடுக்கச் செய்யும் அணுக்களாக அது ருப் பெற்று விடுகின்றது.
 
அப்படி அணுவாக விளைந்து விட்டால் அது தன் உணவுக்காகப் பசிக்கு ஏங்கும். அப்படி ஏங்கப்படும் பொழுது அதே உணர்வை நம் உடலுக்குள் இருக்கும் உயிர் அந்த உணர்ச்சியை உள் நின்று இயக்கப்படும் பொழுது அது ஆணையிடுகின்றது.
 
கண்ணின் புலறிவுக்கும் உடலின் நிலைகளுக்கும் சுவாசிக்கும் மூக்கிற்கும் இந்த உணர்வுகளைக் கவர்ந்த பின்
1.கண் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.சுவாசித்த உணர்வோ உயிருக்குள் சென்று இந்த உணர்வலைகளை உடலுக்குள் பரவச் செய்து
3.உருவான அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கின்றது இந்த உயிர்.
 
செடி கொடிகளை வளர்த்த பின் சூரியன் அதிலிருந்து வெளிப்படும் சத்தைக் கவர்ந்து வைத்து அதில் விளைந்த வித்தினை நிலத்தில் ஊன்றினால் நிலத்தின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே உணர்வின் கிளர்ச்சி எழுந்து அதே செடியாக விளைந்து அதன் வித்துக்களை மீண்டும் உருவாக்குவது போன்று
1.நாம் நுகர்ந்தறிந்த அந்த விஷமான உணர்வுகள் கருவாகி உடலுக்குள் தேங்கிய பின் அணுவாக மாறிவிட்டால்
2.அந்த உணர்ச்சியைத் தூண்டி இந்த உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது நம் உயிர் மற்ற உறுப்புகளுக்கு ஆணையிடுகின்றது.
3.அந்த ஆணையிடும் சாதனம் சிறுமூளை.
4.இந்த உணர்வுகள் பட்டபின் ஆணையிட்டு உணர்வினை கவர்ந்து நுகரச் செய்து உயிருடன் இணைக்கச் செய்து உடல் உறுப்புகளில் பரப்பச் செய்கின்றது.
 
ரத்த நாளங்களில் இப்படிப் பரவி வருவது விஷத்தின் அணுக்களாகப் பெருக்கமாகின்றது. அது உணவாக எடுத்து விஷத்தின் அணுக்களாகத் தன் இனமாகப் பெருகத் தொடங்குகிறது.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
தேள் நம்மைக் கொட்டி விடுமே என்று நம்மைக் காக்கத் தான் அதை அடித்தோம். ஆனால் அது வேதனைப்பட்டுத் துடித்த உணர்வலைகள் நம் ரத்தங்களில் இப்படி விஷமான அணுக்களாகப் பெருகுகிறது.
 
தேளின் உயிரானமா மனிதனாகப் பிறக்கின்றது ஆனால்
1.தேளின் விஷத்தன்மை நம் இரத்த நாளங்களில் அணுக்களாகப் பெருகும் பொழுது மூட்டுக்கு மூட்டு அது பளீர்ர்ர்… என்று மின்னும்.
2.உறுப்புகளின் சில பாகங்களுக்குள் சென்றால் ஊசி தைப்பது போல் பளீர் என்று மின்னும்.
3.அந்த உணர்வலைகள் அங்கே பரவி நம் உடலில் வேதனை உருவாக்கும் அணுக்களாகப் பெருகி விடுகின்றது.
 
இதைத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சாஸ்திரம் கூறுகின்றது.
 
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் உயிர் அந்த உணர்வின் அணுவாக உருவாக்கி விட்டால் அந்த அணு தன் இனத்தைப் பெருக்கி விடும். அது தன் இனமாக எந்த அளவிற்குப் பெருக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அது வளர்ச்சிக்கு வருகின்றது.
 
இந்தப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.