ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2025

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்

உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவமிருப்பேன்


1.ஓம் ஈஸ்வரா! என் உடலை உருவாக்கிய உயிரை ஈசன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா! உயிரால் உருவாக்கிய என் உடலைச் சிவன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா!
 
2.என் உடலுக்குள் இணைந்த உணர்வுகள் அனைத்தையும் வினைக்கு நாயகனாகத் துதிப்பேன்! விநாயகனாகத் துதிப்பேன்! நான் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் சீதாராமனாகத் துதிப்பேன்! ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
3.உயிரால் உருவாக்கிய கண்ணைக் கண்ணன் என்று துதிப்பேன். கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
உயிரால் உருவாக்கிய கண்ணின் கருவிழி தன் எதிரிலே இருப்பதை உடலுக்குள் பதிவாக்குகின்றது. அந்த உருவத்தில் இருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவோ கவர்ந்து அங்கே இருக்கும் உண்மை உணர்வுகளைத் தனக்குள் ஊட்டுகின்றது சத்தியபாமா என்று. இரண்டும் சேர்த்துக் கண்ணன் என்று ஞானிகள் இதைக் காரணப் பெயர் சூட்டினார்கள்.
 
4.கண்ணின் கருவிழியை ருக்மணி என்று துதிப்பேன். கண்ணின் காந்தப் புலனறிவை சத்தியபாமா என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகளைச் சீதாராமன் என்று துதிப்பேன். கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் என்னுள் எண்ணங்களாக இயக்கும் உணர்வைச் சீதாராமன் என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
5.உயிரின் துடிப்பை ஈசன் என்று துதிப்பேன். உயிரின் துடிப்பால் உருப்பெறும் வெப்பத்தை விஷ்ணு என்ற துதிப்பேன். துடிப்பால் ஈர்க்கும் சக்தியை லக்ஷ்மி என்று துதிப்பேன். உயிரால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் அணுவாகும் பொழுது பிரம்மா என்று துதிப்பேன். உருப்பெற்ற மத்தைச் சரஸ்வதி என்று துதிப்பேன்… பிரம்மாவின் மனைவி என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
6.பல கோடி உடல்களில் அறிந்துணர்ந்த உணர்வுகள் அனைத்தும் மனித உடலுக்குள் உருப்பெற்று வளர்ந்த அரும் பெரும் சக்தியை அருள் ஞான சக்தியாகத் துதிப்பேன். மாற்றி அமைக்கும் சக்தியாக முருகா என்று துதிப்பேன்... முருகு என்று துதிப்பேன்… என்னை அழகுப்படுத்தும் அறிவு என்று துதிப்பேன். அருள் ஞான சக்தி என்று துதிப்பேன். அருள் வழியில் எனக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவைப் பிரம்மன் என்று துதிப்பேன். பிரம்மா என்று துதிப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
7.அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் சக்தியாக ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஞான வழியில் வாழ்வேன்.., அருள் ஒளியாகப் பெறுவேன், பிறவியில்லா நிலை அடைவேன்! அண்டத்தில் ஒளிச்சுடராக வாழ்வேன், வளர்வேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
8.உயிரால் உருவாக்கிய இந்த மனித உடலைக் காப்பேன். அருள் ஞான சக்தியை நுகர்வேன். எனக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளை அகற்றுவேன். அருள் சக்தியை எனக்குள் பெறுவேன். இந்த உடலுக்குள் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்கள் அனைத்தையும் அகற்றுவேன், அருள் ஞான சக்தி பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
9.இந்த உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த ஆஸ்துமா நோய், சர்க்கரை சத்து, இரத்தக் கொதிப்பு, வாத நோய் அனைத்தையும் அகற்றுவேன். அருள் ஞான சக்தியை என் உடலில் வளர்ப்பேன்… அருள் சுடராக வளர்ப்பேன்.
 
என் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்வேன். அருள் ஞான வழியில் இந்த உடலைக் காப்பேன். இந்த உடலை உருவாக்கிய ஈசனைத் துதிப்பேன். அருள் ஒளி பெறுவேன். இந்த உடலில் வந்த இருளை நீக்குவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
10.என் உடலை உருவாக்கிய என் அன்னை தந்தையைக் கடவுளாகத் துதிப்பேன். என்னைக் காத்தருளிய அருள் சக்தியாக விளங்கிய என் அன்னை தந்தையைத் தெய்வமாகத் துதிப்பேன்.
 
என் வாழ்க்கைக்கு வழி காட்டிய என் தாய் தந்தையை முதல் குருவாகத் துதிப்பேன். அவர்கள் வழியில் அருள் ஒளி பெறுவேன். இருளை நீக்கும் ஆற்றலைப் பெறுவேன். என் அன்னை தந்தை துணை கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!
 
11.வாழ்க்கையின் இருளை அகற்றுவேன். அருள் ஞான வழியில் வளர்வேன். என் பார்வையில் நான் பார்ப்போர் அனைவரும் தெளிந்த மனம் பெறத் தியானிப்பேன். உலகைக் காத்திடும் உணர்வாக என்னுள் வளர்த்திடுவேன். உலகம் அனைத்தும் ஒன்றென்று இணைப்பேன். உலக சக்தியே எனக்குள் உண்டென்று உணர்வேன்.
 
அருள் ஞான வழியில் உலக மக்கள் அனைவரையும் என்னுடன் இணைந்து கல்யாணராமனாக வாழ்ந்திடுவேன். இணைந்து வாழ்ந்திடுவேன். இன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி வாழ்ந்திட அருள் ஞான சக்தியைத் தியானிப்பேன். உலக மக்கள் அனைவரும் அருள் ஒளி பெரும் சக்தி பெற்றிடத் தவம் இருப்பேன். ஓம் ஈஸ்வரா.. ஓம் ஈஸ்வரா!