நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
“அணு ஆயுத இயந்திரங்களை…” கால மணிகளை உருவாக்கும் நிலைகள் கொண்டு எலக்ட்ரானிக்
முறைப்படி நாடாக்களில் பதிவு செய்து பாதுகாப்பாக வைத்துள்ளார்கள் விஞ்ஞானிகள்.
அதன் மூலம் விஷத்தன்மை
கொண்ட அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
மற்ற நாடுகளில் இராக்கெட்டுகளை ஏவுவதற்காக அதாவது
அங்கிருந்து எதிர் அலைகள் வந்தால் சீறிப்பாய்ந்து அந்த இலக்கினைத் தாக்குவதற்காக… அடுத்த நாட்டை அழிப்பதற்காக இப்படி
வைத்துள்ளார்கள்.
விமானங்களையும் இராக்கெட்டுகளையும் கம்ப்யூட்டர் துணை கொண்டு
இயக்கச் செய்யும்… உணர்வின் அறிவு எலக்ட்ரானிக்காக மாற்றப்பட்டு
எதிர் அலை கொண்டு இவன் இடும் கட்டளைகளைச் சீராக வேலை
செய்யும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.
ஆனால் சூரியனுக்குள் இயங்கும் எலக்ட்ரிக் இப்போது அதிகமாகி விட்டால் என்ன நடக்கும்…?
இன்று வீடுகளில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம்
அதிகமாகிவிட்டால் பல்புகள் ஃபியூசாகி விடுகின்றது. அதைப் போல்
1.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப்
பொறிகள் சூரியனுக்குள் அதிகரிக்கப்படும் பொழுது உற்பத்தியாகும்
எலக்ட்ரிக் அதிகமாகி
2.சீராக இயங்கிக்
கொண்டிருக்கும் எலக்ட்ரானிக்… குண்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அந்தச் சாதனங்கள் செயலிழந்து விடும்
3.இராக்கெட்டுகளோ மற்ற சாதனங்களோ தன்னிச்சையாக இயங்கத் தொடங்கும்.
காரணம் அதற்கென்ற மானிட்டர்கள் வைத்துச் செயல்படுவது செயலிழந்து… சிதைவுண்டு… விஷத் தன்மைகள் அதிகளவில் பரவும் நிலை உண்டு.
1.அத்தகைய நிலை வெகு நாளில்
இல்லை… வெகு துரிதத்தில் இயங்கி விடும்.
2.இதைக் குறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்…
விஞ்ஞானிகளை அறியாமலே இத்தகைய சிதைவுகள் இனி வரும்.
நடக்கப் போகும் அத்தகைய கொதி நிலைகளில் இருந்து தப்ப
வேண்டும் அல்லவா. ஆகவே உடலை விட்டுச்
சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
விஷத்தன்மைகள் பரவி விட்டால் இந்தப் பூமி பரிசுத்தமாகப் பல ஆயிரம் ஆண்டுகளாகும். அதற்குள் மனிதர்கள்
வாழ்ந்தால் மிருகமாகத் தான் வாழ வேண்டும்.
விஷத் தன்மை கொண்டு சிந்தனையற்ற நிலைகளில் ஆரம்ப நிலையில் இந்த பூமியில் உருவான
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தது போன்று தான் வாழ முடியும். சிந்திக்கும் தன்மை இழந்தே இருக்கும்.
1.ஆகவே இப்பொழுது நல்ல
நினைவு இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தில்
துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள்.
2.உங்கள் குடும்பங்களில்
உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்கள் முன்னோர்கள்
ஆன்மாக்களை விண் செலுத்த மறந்து விடாதீர்கள்.
3.அவர்களை ஒளியின் சரீரம்
பெறச் செய்யுங்கள்.
அவர்கள் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில்
இனி எதிர்காலம் விஞ்ஞான உலகில் இருந்து தப்பும் நிலையாக பிறவி இல்லா நிலை அடைய
வேண்டும் என்று செயல்படுத்துங்கள்
இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்… நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி விட்டால் நாம் விண்ணுலகம் செல்ல
முடியும்.
1.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் பிற மண்டலங்களிலிருந்து
வருவதை உணவாக எடுத்து
2.ஒளியின் சுடராக வாழ்வது போன்று நாமும் வாழ முடியும்.
இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும் இங்கிருந்து அகன்று சென்று
மற்ற மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து விண்ணிலே “என்றும் 16”
என்ற நிலையை அடைய முடியும்.
மனிதனான நாம் தான் இத்தகைய நிலையை உருவாக்க முடியும். அருள் ஞானத்தை நமக்குள்
உருவாக்குவோம்… மெய் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம் என்று உங்களைப்
பிரார்த்தித்து வேண்டிக் கொள்கின்றேன்.
நான் சொல்வதைத் தயவு செய்து அலட்சியப்படுத்தி விடாதீர்கள்
குரு எனக்கு இந்த உண்மைகளை உணர்த்தினார் அதைத்தான் நீங்களும் பெற வேண்டும் என்று
1.உங்கள் உயிரை ஈசனாக
மதித்து உடலைச் சிவமாக மதித்து
2.அந்த உயர்ந்த நிலை
நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று நான் தவம் இருந்து கொண்டிருக்கின்றேன்.