ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 14, 2025

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்

மனச் சோர்வுக்கு மருந்தே தியானம் தான்


தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்தன்னை வளர்த்துக் கொண்டிடும் ஒலி மின் நுண்காந்தப் புலமாய்
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட ஈஸ்வரரின் அருள்என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் காட்டும் உறுதி
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”
 
ஈர்ப்பின் கனிஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் விளத்தின் கனிபற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.
 
ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த சலனத்தின் நிலைஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.
 
ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியேஅந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?
 
வேழம் (யானை) தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடிஅந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழி நடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.
 
1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.
 
வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?
 
உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?
 
மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே அப்பொருள்…!”
 
அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டிசோர்வு நிலை நீக்கிதிண்மையின் மனம் ஏந்திஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகிசிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.
 
எமது ஆசிகள்.