
பதஞ்சலி திருமூலரான சந்தர்ப்பம்
கோயிலில் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்பதே ஞானிகள்
காட்டிய வழி. நடராஜா என்று
நடராஜரினுடைய தத்துவத்தைக் கொடுத்தது யார்…? திருமூலர்.
அந்தத் திருமூலர் என்ன செய்தார்…?
அதற்கு முன்னாடி ஒரு அரசனாகப் பதஞ்சலியாக இருந்தார். அரசனாக
இருந்து அவர் கற்றுக் கொண்ட நிலைகள் கொண்டு மந்திரங்களை ஜெபித்தார்.
அரசர்கள் படையெடுத்து வரப்படும் பொழுது உடனே கூடு விட்டுக்
கூடு பாயும் நிலையாகப் பாம்பு உடலில் புகுகின்றார். அந்தப் பாம்பு உடலில் இருந்து
தப்பித்து வந்து விடுகின்றார்.
ஆனால் இவர்களிடம் இருந்த சேனாதிபதி என்ன செய்கின்றார்…? இந்த உடலை ஒரு மறைவிடத்தில் கொண்டு வைத்து விடுகின்றார்கள். காரணம்… படையெடுத்து வந்த
பிற்பாடு அந்த உடலுக்குள் வந்து மீண்டும் தான் தப்பிப்பதற்கு.
ஒரு குகைக்குள் ஒளித்து வைத்து விடுகின்றார்கள். தான் உடலின்
தன்மை எடுத்துப் பாம்பு ரூபம் எடுத்து வெளியில் வந்தாயிற்று.
ஆனால் அவர் தப்பித்து வருவதற்கு இந்த உடலுக்குப் பாதுகாப்பான
கவசம் கட்டி அது வைக்கப்படும் பொழுது அந்த உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்குச்
சில வேலைகளைச் செய்கின்றார்கள்.
1.படையெடுத்து வரும் பொழுது அதற்கு உண்மையான
ஒருவர் காவலுக்கு இருக்க வேண்டும்.
2.ஆனால் எதிரி படையெடுத்து வரப்படும் போது இந்த
உடலினை (அரசனை) அழித்துவிட்டு
3.எதிரி அரசனுக்கு அங்கிருக்கக்கூடிய சேனாதிபதி
இதை வழிகாட்டி விடுகின்றான்.
இந்தப் பாம்பு உடலுக்குள் பதஞ்சலி வந்த பிற்பாடு தப்பித் தவறி வந்து
மாடு மேய்ப்பவனை விஷத்தால் தீண்டி அந்த உடலுக்குள் புகுகின்றான்.
1.இங்கே அந்த மாடு மேய்ப்பவன் உடலுக்குள் வந்து
அவன் வீட்டிற்குள் சென்ற உடனே
2.வரவேற்பும் பல நிலைகள் வந்த உடனே இங்கே
அதிசயத்தைக் காண்கின்றான்.
ஆனால் முதலில் அரசனாக இருந்த ஆத்மா இந்த எளிய உடலுக்குள் வந்து
1.இந்தக் குடும்பத்திற்குள் வந்த உடனே அது
எப்படி…? என்ற நிலையைப் பார்த்த உடனே அந்த வீட்டில்
இருக்கக்கூடிய மகிழ்ச்சியும்
2.ஏழ்மையாக இருந்தாலும் எப்படி இருக்கின்றார்கள்…? அந்த வரவேற்பு கொடுக்கிறார்கள் என்று எண்ணுகிறான்.
காரணம் தான் அரச போகங்களில் இருந்தாலும் தன் மனைவியும் ஒரு
அரசனின் மகள். அதனால் அங்கேயும் பயப்பட வேண்டும். சேனாதிபதிக்கு அதிகாரம்
கொடுத்தாலோ அவனிடம் சிறு மாற்றம் ஆனாலோ எதிர்நிலையை உண்டாக்குகின்றான். அதே
சமயத்தில் மக்களின் நிலைகளிலும் ஒரு மாற்றமானாலும் இது எப்படி ஆகின்றது…?
1.அழித்தல் ஏவல் காத்தல் என்ற நிலைகளில் மந்திரங்களை நாம் கற்றுக் கொண்டாலும் இந்த
உணர்வின் நிலைகள் கொண்டு
2.”அரசனாக இருந்தாலும்…” ஒவ்வொரு
நிமிடமும் தான் பயந்தே வாழ வேண்டி இருக்கின்றது என்று இந்த நிலையை எண்ணிச் சிந்திக்கின்றான்.
இந்த ஏழ்மையின் நிலையில் இருந்த திருமூலரின் உடலில் புகுந்த்து
பதஞ்சலி என்ற அந்த அரசனுடைய உயிராத்மா தான்.
அரசனாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட மந்திரம் ஏவல் பில்லி
சூனியம் அதன் மூலம் எல்லாவற்றையும் தனக்குள் அறிதல் காத்தல் அழித்தல் என்ற நிலையினை
வளர்த்துக் கொண்ட அந்த ஆத்மா இந்த உடலுக்குள் வந்த பிற்பாடு இந்த உண்மையை
அறிகின்றது.
உண்மையை அறிந்த பிற்பாடு தான் “நடராஜா…” என்ற இந்தப் பெயரை வைத்தான்.