“குருநாதர் மூலம் பெற்ற சக்திகளை” நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்
நஞ்சுகளை எல்லாம் முறித்தவன் “துருவ மகரிஷி…” அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள்… சப்தரிஷி மண்டலங்களாக பிறவியில்லா நிலை அடைந்து
வாழ்கின்றார்கள்.
அதனின்று வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பரவச் செய்கின்றது.
1.அதை நீங்கள் பருக
வேண்டும்… பெற வேண்டும்… உங்களுக்குள்
வளர்க்க வேண்டும்.
2.குருநாதர் அதைப் பெறும் தகுதியை எனக்கு ஏற்படுத்தினார்… உண்மையின் உணர்வுகளை உணர்த்தினார்… கேட்டறிந்தேன்…!
3.நீங்களும் பெற வேண்டும்
என்று இப்பொழுது உணர்த்துகின்றேன்.
காடு மேடெல்லாம் அலைந்தேன். துன்பம் நேரும் போதெல்லாம் அதை
அகற்றிடும் நிலை பெற்றேன். அதே போல்
1.துன்பப்படுபவருக்கெல்லாம்
அந்தத் துன்பத்திலிருந்து அவர்கள் அகல
வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும்
என்று
2.எனக்குள் இந்த உணர்வுகளை
வளர்த்தேன்… அதைத்தான் இப்போது உங்களுக்குப் போதிக்கின்றேன்.
3.இந்த உணர்வை யார் பெற
வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ அவர்களுக்கு அந்த நன்மைகள் ஏற்படுகின்றது.
புத்திர பாக்கியம் இல்லை… கரு உருவாகும் சிசுவாக உருவாகும் அந்த வளர்ச்சி இல்லை. என்று சிலர் சொல்லலாம்.
தற்கொலை செய்து கொண்ட ஆன்மாவோ… இடைமறித்து மடிந்ததோ… தாய் கருவிலிருக்கும்
போது இத்தகைய உணர்வுகளை நுகர்ந்தால்… இரத்த நாளங்களில் தன் இனத்தை உருவாக்கும் அணுக்கருக்களை அது வளர விடாது
தடுக்கும்.
அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் அங்கே
வளர வேண்டும். இனவிருத்தியின் உணர்வுகள்
வளர வேண்டும் என்று இந்த உணர்வுகளை நுகர்ந்து…
1.உனக்குக் குழந்தை
கிடைக்கும் போ இந்த உணர்வினை பாய்ச்சுகின்றேன்.
2.அதைப் பெறுவோம் என்று “ஏங்கிப்
பெறுபவருக்கு” நிச்சயம் குழந்தைகள் கிடைக்கும்.
3.கேன்சர் நோயே வந்திருந்தாலும்… இல்லை…! இது கேன்சர் அல்ல சாதாரண
நோய் தான்…!
4.சீக்கிரம் குணமாகிவிடும்
என்ற வாக்கினைப் பதிவு செய்தால் இதை
ஏற்றுக் கொண்டு
5.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இந்த உணர்வின்
அணுக்கருக்கள் விளைந்து அந்தத் தீமைகளை அகற்றும்.
ஆனால் இது எல்லாம் யாம் வாக்காகக் கொடுக்கிறோம் நோய்கள் அகலும் என்று…!
“எங்க சாமி…?” நோய் எங்களை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த உணர்வுகள் இயக்கிக் கொண்டுதான்
இருக்கும். கஷ்டம் என்னை விட்டுப் போக
மாட்டேன் என்கிறது என்று சொன்னால் வேதனை வந்து கொண்டு தான் இருக்கும்.
சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்மைப் பார்ப்போருக்கும் நம் மீது வெறுப்பு வரும். கடையிலிருந்து
ஒரு பொருளை எடுத்துக் காட்டினாலும் வெறுப்பு தான் வரும்.
ஆனால் அதை வாங்குவோர் நலம் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எனக்குள் படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம்
பெற வேண்டும் என்று இவ்வாறு எண்ணினால்… இந்த உணர்வின் மணம் அந்த அருள் உணர்வினைப் பெற்று அவர்கள் நுகரப்படும் பொழுது
1.“அவர்களுக்கும் இது
நல்வழி காட்டும். நமக்குள்ளும் நல் உணர்வுகளாக விளையும்…”
2.இதையெல்லாம் உங்களுக்கு
வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன். எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.