ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2025

ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே… “முடிவு இப்படித் தான் இருக்கும் என்று”

ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே… “முடிவு இப்படித் தான் இருக்கும் என்று”

 
சித்தன் காட்டிய சொல்லில்
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.
 
ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்சித்தர்கள் என்னும் நிலையைப் பெற வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.
 
சிவசக்தி நிலை கப்பாக மேன்மையுறும் செயல்களைத்ம்முள் கண்டு தெளிந்து தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில் மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட அதை ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?
 
1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.
 
மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?
 
தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.
 
என் நிலையோ அந்நிலை…? நன் நிலையே நமக்கு.
 
அம்மன் சக்திகள் அனைத்தும் ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால் எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?
 
1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?
 
அம்மன் சக்திகளில் பெயர் சொல்லி உவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.
 
அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும் மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில் எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.
 
மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.
 
சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?
 
அம்மன் சக்திகள் அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?
 
சக்தி புராணம் என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய தாய் சக்தியின் உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால் அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.
 
ஜோதித்துவ பொருளுக்கும் - உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும் மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.