விஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார்
செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது.
அவன் அதைக் கண்டுணர்ந்து அந்தப் பிழைகள் வராமல் இருக்க அதற்குகந்த
சக்தி வாய்ந்த நிலைகளைச் செயல்படுத்துகின்றான். பிழைகள் நீங்கிச் சீரான நிலையில்
இயங்கச் செய்கின்றான்.
கம்ப்யூட்டர் அதிர்வின் தன்மை கொண்டு கெமிக்கல் கலந்த காந்தப் புலனை
வைத்துக் கொண்டால் இந்த ஒலியின் அதிர்வுகளைக் காட்டப்படும் பொழுது அது எழுத்தோ
படமோ சப்தமோ இயக்கிக் காட்டுகின்றது.
உதாரணமாக பேட்டரிக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் எதிர் நிலையாகும்
பொழுது வெளிச்சமாக வருகின்றது.
இதே போல கெமிக்கல் கலந்த உணர்வுகளின் அதிர்வுகளை எடுக்கப்படும் பொழுது
இது உராய்ந்து அதற்குத் தக்க ஒளிக் கற்றைகளை வீசுகின்றது.
அதன் வழி கொண்டு மனித ரூபங்களையும் கம்ப்யூட்டரில் போட்டுக்
காட்டுகின்றான் விஞ்ஞானி.
ஒரு மனிதனின் கை ரேகையை எடுத்து அந்த மனிதனின் உணர்வின் தன்மையைக்
கம்ப்யூட்டரில் இந்த உணர்வின் அதிர்வுகளைப் பதிவாக்கி அதில் மீண்டும்
அதிர்ச்சிகளைச் செயல்படுத்தும் பொழுது “இந்த மனிதன் தான்…
என்று அவன் ரூபத்தையே…” காட்டுகின்றது.
இதே போல தான் நமது வாழ்க்கையில் பிறிதொருவரின் செயல்களைக் கண் கொண்டு
பார்க்கும் பொழுது
1.அவன் மோசமானவன்…!
2.கோபக்காரன்… கெட்டவன்… தவறு செய்பவன்…. முரண்டு பிடிப்பவன்
3.பிறருக்குத் தீங்கு செய்பவன் என்று
4.இந்த உணர்வெல்லாம் கண் பதிவாக்குகின்றது
5.பின் நமது எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக
மாற்றி விடுகின்றது.
நாம் பிறிதொருவரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரில் பட்டு
இந்த உணர்வின் அதிர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.
1.இரத்தங்களில் எதனின் உணர்வுகள் கலக்கின்றதோ
2.உடலிலுள்ள அணுக்களில் இது சிதறப்பட்டு
3.அந்தந்த உணர்வுக்கொப்ப ரூபங்களை மாற்றி அமைக்கின்றது.
இன்று மனிதனாக இருக்கின்றோம். மிருக குணங்களை கொண்ட உணர்ச்சிகளை நாம்
அடிக்கடி நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலந்து விட்டால் இதன் உணர்ச்சியின்
இயக்கங்கள்
1.நம் உடலில் உள்ள அணுக்களில் கலக்கப்பட்டு
2.அதற்குத்தக்கவாறு நம் உடல் உறுப்புகள் மாற்றமடைகின்றது.
3.உறுப்புகள் மாறும் பொழுது இதனின் மலங்கள் கொண்டு
4.நம் சிந்திக்கும் தன்மையும் மாறுகின்றது.
சகஜ வாழ்க்கையில் கோபப்படுவது வெறுப்படைவது வேதனைப்படுவது போன்ற
உணர்ச்சிகளைத்தான் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் என்ன மாற்று வழி
வைத்திருக்கின்றோம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது.
நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.
மனிதன் ஒரு எந்திரத்தை உருவாக்கி அதில் பிழைகள் வந்து விட்டால்
கம்ப்யூட்டரின் இயக்கத்தால் கண்டு பிடித்துச் சரி செய்து “சூப்பர்..” என்ற நிலையில் அதை மாற்றியமைத்து
எந்திரத்தைச் சீராக்கி விடுகின்றான்.
வெறுப்படைபவர்கள் கோபப்படுவோர்கள் வேதனைபடுவோர்கள்
வேதனைப்படுத்துவோர்கள் போன்ற பலரின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதை நுகர்கின்றோம்.
அந்தந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு இயக்கம் ஆகின்றது. உதாரணமாக
1.வேதனைப்படுவோரைப் பார்த்து அவர் மீது அன்பு கொண்டால்
2அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுகின்றோம்.
3.அவர் மீது அன்பு இல்லாதபடி வெறுப்பாக இருந்தால்
4.அவர் செய்த நிலைகளுக்கு அப்படி வேதனைப்பட்டுதான் ஆகவேண்டும் என்ற
உணர்வு நமக்குள் வருகின்றது
வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலும் வெறுப்படைந்தால் அவர் மீது
வெறுப்பின் நிலையே நமக்குள் அதிகமாக வந்து விடுகின்றது.
ஆனால் எப்படிப்பட்ட்ட உணர்வுகளை நுகர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மைகள்
அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.
இத்தகைய தீமையான இயக்கங்கள் நமக்குள் வளர்ந்திடாது மாற்றி அமைக்க
வேண்டும். தீமையான இயங்களை மாற்றியமைக்கும் சக்தியாகத்தான் உங்களுக்குள் தீமையை
வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.
உயிருடன் ஒன்றி இருளை மாய்த்து என்றும் ஒளியாக இருப்பது தான் அந்தத்
துருவ நட்சத்திரம். அதற்கு “விஷ்ணு தனுசு” என்று காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில்
1.தீமையான நிலைகளைக் கண்டால்
2தீமைகளை நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்தால்
3.அந்தத் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் வராதபடி
4.தீமையான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்காதபடி
5.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் தீமைகளைப் பருகாதபடி
6.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு மாற்றி அமைத்தல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப் பொழுது நமக்குள் ஏற்றி வைத்துக்
கொண்டால் விஞ்ஞானிகள் “SUPER COMPUTER…” என்று செயல்படுத்துவது போல்
நம்முடைய வாழ்க்கையில் தீமைகளை உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும்.