
மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?
அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள்
பெற்றபின்
1.அந்த அலையின் தொடரைத் தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை அங்கேயும் பதியச் செய்து
2.அவர்கள் உடலிலே ஆரோக்கிய நிலைகளை
வரச்செய்து அதன்பால் அவர்களிடம் நல்ல எண்ணங்களை வெளியிட்டபின்
3.அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டார்கள்.
எனென்றால் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும்
இந்தப் பூமியிலே இருப்போருடன் இணைந்து பலருடைய எண்ணங்களிலும் விண்ணின் சக்தியைப் பாய்ச்சச்
செய்தனர்.
காரணம்… கடந்த கால மகரிஷிகள் எல்லோருமே உடலை
விட்டுச் செல்லும்போது அவர்கள் விண் செல்லுவதற்குத்தான் இவ்வாறு செய்தார்கள்.
போகரோ வான்மீகியோ வியாசரோ அகஸ்தியனோ அவர்களைப்
போன்று எண்ணிலடங்காத மகரிஷிகள் எல்லோருமே
1.தமக்குள் பெற்ற ஆற்றலைச் சாதாரண மக்களின் மத்தியிலே தன் உணர்வின் சொல்லாலே அங்கே பாய்ச்சப்பட்டு
2.அவர் உடல்களில் துன்பத்தை ஊட்டிக்
கொண்டிருக்கும் உணர்வுகளை மாற்றி
3.நல்ல சொல்களை அவர்களிடமிருந்து வெளிப்படச் செய்து
4.அவர்கள்பால் அந்த நல்ல எண்ணங்களை ஈர்த்துக் கொண்டார்கள்.
இப்போது யாம் உங்களுக்கு ஒரு நன்மையைச்
செய்கிறோம் என்று எண்ணும்போது அந்த நன்மையின்பால் எம்மைப் பார்க்கின்றீர்கள். இவரால் நல்லது நடந்தது என்று நீங்கள் எண்ணும் எண்ண அலைகள் ஒன்று
சேர்த்துக் கலக்கிறது.
1.உங்களது உணர்வின் எண்ணம் எமக்குள்
பதிவாகின்றது.
2.எமது எண்ணம் உங்களுக்குள் நல்லதை
உருவாக்குகின்றது.
அப்படி நல்லதை உண்டாக்கப்படும் போது அந்த
உணர்வு கொண்டு யாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் நீங்கள்
எல்லோரும் எண்ணும்போது யாம் விண் செல்ல முடிகின்றது.
இப்படித்தான்
1.அன்றைய மெய் ஞானிகள்
ஒளிச் சரீரம் பெற்று விண் சென்றார்கள்.
2.ஆகவே நாம் அனைவரும் அவர்கள் சென்ற
வழியிலேயே விண் செல்வோம்.