
தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்
1.அதாவது, நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்…”
2.இந்த “உடலுக்குள் உண்டான எண்ணங்களை…” (உடல் பெறும் உணர்வுகள்) எடுக்கக் கூடாது என்பதற்குத்தான்
3.தண்டாயுதபாணியாக… நிராயுதபாணியாக வைத்துள்ளார்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து நமக்குள் “ஊன்றுகோலாக…” வைக்க வேண்டும்.
5.அதன் வழியில் நமக்குள் வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும்
6.அதற்காகத் தான் இப்படி உருவகப்படுத்திக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
ஞானிகள் இப்படித் தெளிவாகக் காட்டியிருந்தாலும்…
1."அவன் ஆண்டி..! நீ பார்க்காதே.." கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது…!
2.ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது பார்த்தால் தொழில் போய்விடும் என்று திசை திருப்பி விட்டார்கள்.