ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2024

ஒலி(ளி)மயமான உலகம்

ஒலி(ளி)மயமான உலகம்


இவ்வுலகிற்கு காற்று தண்ணீர் ஒலி இம்மூன்றும் எப்படி முக்கியமோ அதைப் போல் தான்
1.இம்மூன்றையும் பெறுவதற்கு ஆதி முதலாம் ஓம் என்ற நாதத்தை எழுப்பும் சப்த அலையும் மிகவும் முக்கியம்.
2.”சப்த அலை இல்லாவிட்டால் காற்று வீசிட முடிந்திடாது.
3.அக்காற்று இல்லாவிட்டால் ஒளி பெற்றிட முடியாது.
4.அவ்வொளிக் கதிர்களிலிருந்து வரும் நீரின் நிலையும் நாம் பெற்றிருக்க முடியாது.
 
இம்மூன்றிற்கும் மூலமான அச்சப்த அலைகள் நாம் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை நமக்கு அருளும் நிலை வியாழன் மண்டலத்திற்குத் தான் கிடைத்துள்ளது.
 
வியாழன் மண்டலம் இப் பூமியை விட பத்தில் ஒரு மடங்கு அளவு தான் சுற்றலின் வேகம் உள்ளது. நாம் இங்கு பத்து நாள் என்று கணக்கிடும் நாள் வியாழனில் ஒரு நாள் தான். நீண்ட பகலும் நீண்ட இரவும் கொண்டதுமே வியாழன் மண்டலத்தின் நிலை.
 
இப்பூமிக்கு மேல் பெரிய மண்டலம் அது. பெரிய மண்டலம் என்பது வியாழன் மண்டலத்தில் மூன்றில் ஒரு பகுதி தான் பூமியின் நிலை உள்ளது
 
அந்த வியாழன் மண்டலத்திலிருந்து தான் சப்த அலைகள் காற்றுடன் கலந்து அச்சூரியனின் அதிவேகச் சுற்றலில் அவ்வியாழன் மண்டலத்திலிருந்து வரும் சப்த ஒளிக்கதிர்களை ஈர்த்து இப்பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் இச்சூரியனிலிருந்து சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறும் எல்லா மண்டலங்களுக்குமே இச்சப்த அலைகளைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் உள்ளது.
 
இச்சப்த அலைகளிலிருந்துதான் நாம் நுகரும் தன்மையும் வருகின்றது. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். அவ்ஒலியிலிருந்து கலந்து தான் நமக்கு மணமும் பெற முடிகின்றது என்று.
 
அம்மணம் எல்லா வகை மணம் பெறுவதற்கும் அச்சப்த அலைகளினால் தான் நாம் பெற முடியும்.
1.வியாழன் நிலை இல்லாவிட்டால் இச்சப்த அலைகளும் இல்லை.
2.சப்தத்திலிருந்து ஒளியும் காற்றும் நீரும் பெறும் நிலையும் இல்லை.
 
இச்சூரியனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒவ்வொரு நிலை கொண்ட அணுக்கதிர்களை அச்சூரியன் பெற்றுத் தான் நமக்கு அளிக்கின்றது எல்லா நிலைகளையுமே.
 
மழை வருவதற்கும் நீர்நிலை பெறுவதற்கும் செவ்வாய் மண்டலத்தின் நிலையைப் பற்றி விளக்கினேன். அச்செவ்வாய் மண்டலத்திற்கு வியாழனிலிருந்து அணுக்கதிர் சூரியனின் மேல் பட்டு அச்சூரியனிலிருந்து பாயும் தன்மையில் செவ்வாய் மண்டலம் ஈர்த்து வெளியிடும் நிலையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே இப்பூமி பெறுகின்றது.
 
இப்பூமியைப் போல ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு நிலை உள்ளது. ப்பூமியிலிருந்து சில நிலைகள் இவ் பூமியை நேர்கொண்டுள்ள மண்டலங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் தன்மையும் உள்ளது.
 
நாம் இங்கிருந்து பார்க்கும் பொழுது சந்திரனின் நிலை எப்படிக் குளிர்ந்து காணப்படுகின்றதோ அதே நிலை கொண்டுதான் பூமியின் நிலையையும் சந்திரனிலிருந்து கண்டிடலாம்.
 
சூரியனிலிருந்து சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள எல்லா மண்டலங்களின் நிலையும் இந்த நிலை கொண்டு தான் நாம் சந்திரனைக் காணும் நிலை கொண்டு தான் குளிர்ந்த நிலையில் காணப்படுகின்றது.
 
1.எல்லா மண்டலங்களின் அணு சக்தியை ஈர்த்துச் சுற்றும் தன்மை உள்ளதால் தான் சூரியனின் வேகம் துரிதப்படுகின்றது.
2.சூரியனின் வேகம் துரிதமாகச் சுற்றுவதால் தான் அதன் ஒளியும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதிகமாகப் பெறும் பாக்கியம் பெற்றுள்ளது.
 
சூரியனை மையமாக வைத்துச் சுற்றி கொண்டுள்ள மண்டலங்களைப் போல பல சூரியன்களும் பல மண்டலங்களும் ஜீவனுள்ள மண்டலங்களும் ஜீவன் பெறாத மண்டலங்களும் கணக்கில் அடங்கா நிலை கொண்டு சுற்றி கொண்டுள்ளன.