ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2024

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

 

மனிதன் ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது நிலைக்குத் தான் செல்ல வேண்டும்… ஐந்து அறிவுக்கல்ல…!

 
ரிஷிகளுடன் இணைந்த நிலையில் சூட்சும உலகத்திற்குச் செல்லும் தன்மைக்கு வருவதற்குத் தான் இந்தப் போதனைகள் எல்லாம் இங்கே கொடுக்கப்படுகிறது.
 
மனிதச் சரீரத்தில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த சூட்சுமத்தன்மை இந்நிலை எல்லாம் மனதினைச் செலுத்திய மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த நிலையில்
1.அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்று சப்த அலைகளை வெளியிட்டார்களோ
2.அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றி அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டே உள்ள தன்மையில்
3.அந்நிலையில் உள்ள மிருகத்தின் நிலையும் அம்மிருகம் எடுக்கும் சுவாச அலையும்
4.அம்மிருகத்தைச் சுற்றிக் கொண்டே உள்ள மிருகத்தின் சப்த அலையும் ஒரே தன்மையில் உள்ள பொழுது
5.ஒன்றை ஒன்று எதிர்ப்படும் தன்மையில் இரு சப்த அலைகளும் ஒன்றுபட்டு இம்மனிதனின் உயிரணு அந்த மிருகத்தின் உடலுடன் செல்கின்றது.
 
இந்நிலையில் அம்மிருகத்தின் ரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜனனத்திற்கும் இம்மனிதன் வருகின்றான். மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து மனிதன் மிருக நிலைக்கும் வருகின்றான் என்பதின் பொருள் இதுவே.
 
சில ஆவிகளின் நிலை மிருக உடலுக்கு வந்த பிறகு அம்மிருகத்தின் ஆயுட்காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அவ்வுடலில் இருந்து வெளிப்படும் நிலையில் பிற ஒரு ஜென்மத்திற்கு மனிதச் சரீரம் எடுக்கும் தன்மை அற்று மிருக ஜனனத்திற்குத் தான் வரமுடிகிறது அவ்வாவியினால்.
 
ஆனால் மிருக உடலுக்குச் சென்ற உயிரணு ஏன் அந்த உடலில் இருந்து வெளிப்பட முடிந்திடாதா…? என்று எண்ணிடலாம்.
 
மிருக உடலுக்குச் சென்ற பிறகு மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் அவ்வாறு வெளிவர முடிந்திடும்.
1.மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் போது
2.இந்த மனித உயிரணு எப்படி மீண்டும் வெளிவர முடிந்திடும்…?
 
ஆக்ரோஷம் கொண்ட இம்மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான் மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது என்பதல்ல.
 
மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அம்மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அம்மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இவ் உயிரணுக்களின் நிலை எல்லாம் புழுவாகின்றன.
 
சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அம்மிருகத்தின் உடலுடன் உள்ள நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜனனத்திற்கு வருகிறது.
 
மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல. மிருகத்தின் உயிரணுவும் மனிதனின் சரீரத்தில் வந்து தாக்கும் தன்மை உள்ளது.
 
ம்மனிதன் எடுக்கும் சுவாச நிலையில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்ற மனிதர்களின் உடலில்
1.இவன் எடுக்கும் சுவாச நிலைக்கும் அம்மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்று படும்பொழுது
2.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலில் செல்லும் நிலையில் அம்மனிதனையே அவ்வுயிரணு மிருகமாக்கும் தன்மையில்
3.மனித உடலில் மிருக உயிரணுக்களின் தாக்குதலைப் பெற்று மிருகத்தின் குணநிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால்
4.அம்மனிதனின் நிலை மிருகத்தின் குணத்திலிருந்து மாறுபட முடியாமல்
5.மென்மேலும் விரோதத்தையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத்தான் மனிதனின் தன்மையும் வருகிறது.
 
அந்நிலையில் இருந்து மீண்டு மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்
1.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குண நிலைகளைத் தன்னை விட்டகற்றி
2.தனக்குள் அவ்வன்பே தெய்வமான அன்பென்னும் தெய்வ சக்தியைப் பெற்று வாழ்ந்திடும் நிலையில்தான் மீண்டு வந்திட முடியும்.