ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2024

பூமிக்கும் சுவாச நிலையுண்டு

பூமிக்கும் சுவாச நிலையுண்டு

 
இவ்வுலகம் இவ்வுலகைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டே சுற்றும் இவ்வுலகினில் எல்லா இடங்களும் ஒன்று போல் இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபட்டு மழை காற்று உஷ்ணம் இப்படிப் பல நிலைகளில் மேடு பள்ளம் சமதரை கடல் இப்படியும் ஒன்று போல் இல்லாமல் ஒரே நிலையில் சூரியனிலிருந்து சக்தியைப் பெறும் நிலைகளில் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபட்ட நிலை இவ்வுலகினிலே உள்ளதல்லவா.
 
இவ்வுலகம் சுழலும் தன்மையில்
1.அங்கங்கு வசிக்கின்ற உயிரணுக்களின் நிலையைக் கொண்டு அங்குள்ள பூமியின் நிலை உள்ளது
2.அங்கங்கு வளரும் தாவரங்களின் நிலையும் உள்ளது.
3.அந்நிலை கொண்டே அச்சூரியனின் சக்தியை எந்த நிலை கொண்டு பூமி ஈர்த்து வெளிப்படுத்துகின்றதோ
4.அந்த நிலையில் தான் உள்ளன அங்கங்கு உள்ள நிலை எல்லாம்.
 
சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் பூமியில் படும்பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றது. ஈர்த்த நிலை கொண்டு இப்பூமி விடும் சுவாச நிலை கொண்டு தான் அந்தந்த நிலையில் உள்ள இயற்கைத் தன்மை எல்லாம்.
1.யிரணுக்களுக்கு மட்டுமல்ல சுவாச நிலை
2.இப்பூமித் தாயும் ஈர்த்து எடுத்துச் சுவாசிக்கும் தன்மை பெற்றவள் தான்.
 
அவள் ஈர்த்து எடுத்த நிலையில் வளர்வதுதான் உயிர் அணுக்களும் மற்ற தாது பொருளும் தாவர வர்க்கங்களும் மனிதனிலிருந்து எல்லா உயிரணுக்களும் தான்.
 
1.மழையும் எரிமலையும் பனிமலையும் குளம் ஆறு கடல் எல்லாமே உயிரணுக்கள் தான்.
2.ஜீவன் உள்ள ஜீவன்கள் தான் எல்லாமே.
 
சில இடங்களில் வளர்ந்திடும் பனி மலையும் எரிமலையும் எந்த நிலை கொண்டு வந்ததப்பா இப்பூமியில்…?
 
இப்பூமியில் உள்ளது போல் கலந்த நிலை எரிமலை பனிமலை சமநிலை இப்படிப் பல கலந்த நிலை ஒவ்வொரு மண்டலத்திற்கும் மாறுபடும் தன்மையில் உள்ளது.
 
எரிமலை எப்படித் தோன்றுகிறது…? ஆகாயத்திலிருந்து அக்கினிப் பிழம்பு வந்து அத்தரையில் மோதி வளர்ந்ததுவா எரிமலை…? இல்லையப்பா…!
 
இப்பூமியின் மேல் ஒவ்வொரு நிலை கொண்டு இப் பூமி சுழலும் வேகத்தில் மழை பனி காற்று இப்படி எல்லா நிலைகளும் மோதும் பொழுது இப்பூமி ஈர்த்து அப்பூமியின் உள்நிலையில் பெரும் காற்று மண்டலம் உள்ளது.
 
அப்பூமி ஈர்க்கும் தன்மையில்
1.உள் நிலையில் உள்ள உஷ்ணமான காற்றும் குளிர்ந்த காற்றும் ஒன்றை ஒன்று மோதும் நிலை கொண்டு
2.பல நிலை கொண்ட தன்மையில் பூமி ஈர்ப்பதினால் அந்த நிலையிலேயே அத்தன்மை வெளிப்பட்டுத் தான்
3.அப்பூமியிலிருந்து பொங்கி வருவது தான் எரிமலைகளும் பனி மலைகளும்.
 
இப் பூமியின் மேல் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு நிலை கொண்ட தன்மை உள்ளதெல்லாம் இந்த நிலை கொண்டு தான். நில அதிர்வு வருவதும் நில வெடிப்பு வருவதும் சூரியனிலிருந்து வரும் தாக்கும் நிலையில் வருவது அல்ல.
 
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில்தான் வருகின்றன இந்நிலைகள் எல்லாம்.
 
இப்பூமியில் மழை நிலை அதிகம் உள்ளது.
1.பூமிக்கு எந்த நிலை கொண்டு மழை வருகின்றது…?
2.எந்த நிலை கொண்டு ஒலி வருகிறது…?
3.எந்த நிலை கொண்டு ஒளி வருகிறது…?
4.இப்படி மணம் சுவை காற்று இப்படிப் பல நிலைகளையும் இப் பூமி எப்படிப் பெறுகிறது…? என்பதனையும் விளக்கிடுவேன்.
5.இப்பூமி பல நிலைகளைப் பெறுவதற்கு பல மண்டலங்களின் தொடர்புடன் தான் எல்லாமே உள்ளன இப் பூமிக்கு.