ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 17, 2024

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

உணர்வுகளின் கலவைகளையும் அது நம்மை இயக்குவதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்


உதாரணமாக ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அவனுக்குள் விளைந்த கோபமான உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால் அதன் உணர்வின் தன்மையை மற்றொரு மனிதன் நுகர்ந்தால்அந்த உணர்ச்சியின் தன்மை அவனுக்குள் வந்து பெண் சக்தி என்ற நிலைகள் காளியாக மாறுகின்றது.
 
உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் உணர்ச்சியின் வேகங்கள் வரும் பொழுது அந்த எண்ணங்கள் வருகின்றது.
 
ஆககண் கொண்டு ஒருவர் தவறு செய்யும் உணர்வினைக் கண் கருவிழி பதிவாக்கித் தன் உடலுக்குள் வைத்துக் கொண்ட பின் இந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின் இந்த எண்ணங்கள் வருகின்றது.
 
அந்த எண்ணங்கள் வரும் பொழுது தான்
1.கோபத்தின் நிலை கொண்டு இந்த உணர்வுகள் இவன் எப்படிக் கோபப்பட்டானோ
2.அதே மாதிரி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்து அந்த உணர்வின் அறிவாக அங்கே இயக்குகின்றது.
 
ஆனால் அவன் நுகர்ந்த உணர்வுகள் காளியாகி உடலான சிவன் ருத்ர தாண்டவமாக அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அங்கங்களும் அசைவுகளும் வருகின்றது.
 
அதே சமயத்தில் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவித்து அரவணைக்கும் தன்மை வருகின்றது.
 
மகிழ்ச்சி பெறும் உணர்வை ஒரு மனிதன் வெளிப்படுத்துகின்றான் என்றால் கண்ணில் உள்ள கருவிழி அந்த மகிழ்ச்சி பெறும் மனிதனைப் பதிவாக்கி விட்டால்
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அவன் மகிழ்ச்சி பெறும் உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது
2.உயிரிலே பட்டபின் இனிமையான நாதங்களாக வாசிக்கின்றது.
 
உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாய் தனது நிலைகளுக்கொப்ப குரைக்கப்படும் பொழுது இடைமறித்தால் எப்படி வருகின்றது…?
 
1.உபதேசத்தைக் கூர்ந்து கேட்க வேண்டும் என்ற எண்ணமும்
2.நாய் குரைத்து அதைக் கேட்க விடாது இப்போது தடைப்படுத்துகிறதே…! என்ற உணர்வும் இந்த இரண்டும் கலந்த எண்ணங்களாக நமக்கு வருகின்றது.
 
ஆகவே நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ இது கலவையின் உணர்வின் தன்மையாக அணுவாக உருவாக்குவது இந்திரீகம் என்பது. ஆகவே இந்த உடலில் இந்திரலோகம் என்று அதைக் காரணப் பேர் வைத்து அழைத்தார்கள்.
 
நல்ல உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு எதிர்மறையான உணர்வு இரண்டும் கலக்கப்படும் பொழுது
1.நமது உயிர் இதனை நன்மை என்று கருதினாலும் இந்த உணர்ச்சிகள் நமக்குள் அதன் மீது வெறுப்பான உணர்வுகளும் கலக்கின்றது.
2.வெறுப்பு கலந்த பின் நம் உடலுக்குள் அது இந்திரீகமாக மாறுகின்றது
3.சாமி நன்றாக பேசிக் கொண்டிருந்தார் இந்த நாய் குரைத்தது கேட்க முடியாமல் போய்விட்டது…! என்று திரும்பத் திரும்ப எண்ணினால்
4.இந்த உணர்வின் அதிர்வுகள் அடுத்தாற் போல் அந்த அணுவின் தன்மை அடைகின்றது.
 
நாம் நல்ல நிலைகளைச் செயல்படுத்தி வந்தாலும் இதே குணங்கள் என்ன செய்யும்…?
 
கண்ணால் பார்க்கப்பட்டது ஹரி கிருஷ்ணா. சூரியன் ஹரி…! அந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிவாகிய நிலைகள் வந்தாலும் செவி வழி கொண்டு உணர்வின் தன்மை வரும் பொழுது நினைவு அதன் பால் கவர்ந்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டும் கலந்து அது இந்திரீகமாக மாறுகின்றது.
 
அவ்வாறு இந்திரீகமாக மாறினால் அதன் உணர்வின் தன்மை மீண்டும்… “சாமி அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்அதைக் கேட்க விடாது நாய் குரைத்துக் கொண்டே இருந்தது…” என்ற அந்த உணர்வும் கலந்து கலந்து இதன் அணுவின் தன்மையாக விளையும் தன்மை வந்து விடுகின்றது.
 
அப்படிப்பட்ட அணுத்தன்மை அடைந்து விட்டால் பிரம்மா…! நான் சொன்ன உணர்வும் நாய் குரைத்த உணர்வுகளும் கலக்கப்பட்டு அந்த உணர்வின் இயக்கமாக அணுவின் தன்மை அதையே உணவாக எடுத்து நமக்குள் இந்திரலோகத்தில் சேர்கின்றது.
1.நல்ல கருத்துக்களைக் கேட்க விரும்பினோம்
2.இடைமறித்து நாய் குரைத்துத் தடுத்தது என்ற எண்ணங்களும் வரும்.
 
இதே போன்று நீங்கள் யாரிடமும் எடுத்து இதைச் சொல்லும் பொழுது நல்ல செயல்களை செய்தாலும் அடுத்து எவராவது இடைமறித்தால் தாங்கும் நிலை இல்லாது அவர் மீது வெறுப்பின் உணர்வு கொண்டு நல்ல வார்த்தை இல்லாதபடி நம்முடைய சொல்லும் சொல்ல வேண்டி வரும்.
 
ஆக மையமாக இருந்து சொல்வதைக் கேட்டாலும் அவருக்குள் என்ன இப்படிப் பேசுகின்றார்…? என்று வெறுப்பின் தன்மை வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
சந்தர்ப்பம்…!
1.உணர்ச்சியின் தன்மை செவி வழி உந்தி
2.கண் வழி அந்த உணர்வினை நுகரும் தன்மையும்
3.நுகர்ந்த உணர்வு உயிரின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் தன்மை உடலை இயக்குவதும்
4.அதற்குள் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை எப்படி உருவாக்குகின்றது…? என்பதனை
5.நமது குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் அனுபவரீதியிலே எம்மை அறியும்படி செய்தார்.