ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2024

தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்

தனக்குள் இயங்கும் நுண்ணிய நிலைகளைத் தெரிந்திடும் “எண்ண வலு கொண்டவர்கள்” ஞானியாகின்றார்கள்


வைத்திய ரீதியிலே சிலர் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். நோயுடன் வருபவர்களின் நாடித் துடிப்புகளை எண்ணித் தான் பரிசீலனை செய்வார்கள்.
 
இவர்களுடைய (வைத்தியர்) வாழ்க்கையில்
1.மற்றவர்களின் உணர்வுகளை வேகமாக நுகர்ந்தால் துடிப்பின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும்
2.இவருடைய வேகத்துடிப்பு இப்படி ஆனால் அவரின் (நோயாளியின்) நாடியினுடைய துடிப்பை அது அடக்கிவிடும்.
3.அங்கே இருக்கும் உண்மை நிலைகளை அறியாதபடி துடிப்பு அடங்கிய பின் அதற்குத்தக்க தான் மருந்து கொடுப்பார்
4.பித்தம் சிலேத்துமம் இப்படி இருக்கிறது என்று.
 
உதாரணமாக தெர்மாமீட்டரையே வைத்துப் பாருங்கள். அது வைக்கப்படும் பொழுது அங்கேயும் மேக்னட் அதிலே உள்ள பாதரசம் இந்த உணர்வின் அழுத்தத்தைக் கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொடுக்கின்றது. அதிலேயும் காந்தப்புன் உண்டு துடிப்பின் உணர்வுகள் உண்டு.
 
கோபமாக வெறுப்பாகவோ அல்லது அதிகமான நிலைகளிலே வேலை செய்து களைப்பின் தன்மை கொண்டு எரிச்சல் ஊட்டும் நிலைகள் வந்தால்
1.அந்த உணர்வுடன் அந்த தெர்மாமீட்டர் வைத்துப் பார்த்த உடனே உற்றுப் பார்க்கும் நிலைகளில் கண் எரிச்சலாகி விடும்.
2.என்ன…! ஒரு பாயிண்ட் ஜாஸ்தியாக இருக்கிறது… சரியாகப் போகும் போ…! என்று அளவுகோலை மாற்றி விட்டு மருந்தையும் கொடுத்து விடுவார்கள்
 
ஏனென்றால் இயற்கையின் நிலைகளில்… கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்… கீதா உபதேசம் கொடுப்பது யார்…? கண்கள்.
 
கண் நுகர்ந்ததைத்தான் காட்டும்… அதாவது எதை எண்ணிப் பார்க்கின்றோமோ அதைச் செயல்படுத்தும்.
 
நாம் சலிப்பும் சஞ்சலமும் கொண்ட பின் ஒரு பொருளைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சலிப்பினால் உண்மையை அறிய முடியாது போய் விடுகின்றது.
 
ஆகவே…
1.மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் நுண்ணிய நிலைகள் உண்டு
2.இதைத் தெளிந்து கொண்ட பின் வலுவான எண்ணம் கொண்டவர்கள் ஞானியாகி விடுகின்றார்கள்…”
3.சந்தர்ப்பத்தில் உணர்வின் வலுக் கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் வருகின்றது.
 
தியான வழியில் உள்ளவர்கள் சில சந்தர்ப்பங்களில்
1.இவையெல்லாம் கொஞ்சம் எண்ண வலுவைக் கூட்டினோம் என்றால்
2.உண்மை நிலைகள் வாழ்க்கையில் எது வந்தது…?” என்று சிந்திக்க முடியும்
3.உணர்ச்சிவசப்படுவதில்லை…!
 
இதை ஏன் சொல்கிறேன் என்றால் பள்ளிகளில் பாடங்களைப் படித்தாலும் அனுபவ ரீதியில் வருவதற்காக அளவுகோலைக் காட்டி அனுபவத்தைக் கொண்டு வருகின்றார்கள். பாட நிலையை வைத்து மட்டும் வைத்துக் கல்வியைச் செயல்படுத்துவதில்லை.
 
அது போன்று தான் உங்களுக்கு அனுபவங்களைப் பெறச் செய்கின்றோம் அந்தச் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றோம் (ஞானகுரு).
 
ஆக… இந்த வாழ்க்கையில் நம் வலிமை எதிலே இருக்கின்றது…?
 
நஞ்சின் உணர்வின் வேகத்திலிருக்கும் பொழுது நற்குணங்களின் தன்மையை அது செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
அந்த நஞ்சின் தன்மையைச் செயலற்றதாக ஆக்கும் அருள் ஒளியினை உங்களுக்குள் கூட்டி
2.அருள் ஒளியினால் காலப்பருவம் கொண்டு அதை அடக்கும் வல்லமை உங்களுக்குள் வர வேண்டும்.
 
யாம் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் சென்று அதைப் பதிவு செய்யும் பொழுது ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய” என்ற அழுத்தத்தின்  தன்மை அது உங்களுக்குள் பெருகுகின்றது.
 
ஓரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்றப்படும் பொழுது முதலில் கலங்கலாகத் தெரியும் ஆனால் நல்ல தண்ணீரை அதிகமாக ஊற்ற ஊற்ற அந்த கலங்கல்கள் குறைந்து சிறிது தெளியும்…”
 
இதைப் போல்
1.எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில் அழுக்கின் நிலையாக இருப்பினும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க உங்களுக்குள் மனம் சிறிது தெளியும் நிலை வருகின்றது
 
அதனால் தான் உபதேசிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றேன்…!