சூரியனுக்குள் பரவிய நஞ்சினால் “இரு மடங்கு கரண்டை” அது உருவாக்கப் போகிறது
இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் நுகரும் விஷத்தன்மையை சூரியன் தனக்கு அருகில் கொண்டு வரப்படும் பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வின் வலுவால் எதிர்த்துத் தாக்கி வெப்பமாக்கி விஷத்தைப் பிரித்து அதற்குள் உண்டான சத்தை ஒளிக்கதிர்களாக மாற்றும் நிலை பெறுகின்றது.
1.விஷத்தைப் பிரித்து வெப்பமும் காந்தமும் உருவாக்கப்படுகிறது.
2.ஆனால் நகர்ந்து செல்லும் பொழுது முதலிலே நுகர்வது விஷத்தன்மையைத்தான்.
3.காரணம் அந்த விஷம் இயக்கச் சக்தியாக வருகின்றது
4.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் வருகின்றது வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும் உருவாக்குகின்றது.
5.அதன் வழியில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியனால் உருவாக்கப்பட்ட மனிதர்கள் தான் நாம்.
6.ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நஞ்சுகள் அனைத்தும் சூரியனுக்குள்ளும் இன்று பரவிக் கொண்டுள்ளது.
காரணம்… மிக சக்தி வாய்ந்த விஷத்தன்மைகளை உருவாக்கத் தெரிந்து கொண்டான் மனிதன். அதை வைத்து மற்ற நாட்டை அழிக்க வேண்டும் என்ற உள்நோக்குடன் தான் அதைச் செயல்படுத்துகின்றான். “மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும்” என்று தான் விஞ்ஞான அறிவு கூறுகின்றது.
ஆனால் மெய்ஞான அறிவு விஷத்தை ஒடுக்கித் “தனக்குள் ஒளியின் அறிவாக வளர்க்க வேண்டும்…” என்று கூறுகின்றது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.ஆக இன்று உலக நாடுகள் அனைத்துமே தன் நாட்டைக் காக்க வேண்டும் என்று செய்தாலும்
2.அவர்கள் நாட்டையும் அவரால் இன்று காக்க முடியவில்லை
உலகத்தையே அடிமையாக்கி தன் சொல்லுக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்று இன்றும் அமெரிக்கா சில செயல்களைச் செய்து கொண்டுதான் இருக்கின்றது.
மற்றவர்கள் யாரும் அவனை மீறி எதுவும் செய்யக்கூடாது. தானே அனைத்தும் செய்ய வேண்டும் என்று “வான மண்டலத்தையே நச்சுத் தன்மையாக்கி விட்டார்கள் அமெரிக்காவும் ரஷ்யாவும்…”
அவர்களைப் பின் தொடர்ந்த மற்ற நாடுகளும் வான மண்டலத்தை விஷத்தன்மை ஆக்கிக் கொண்டுள்ளார்கள்
1.அதனால் சூரியன் ஜீரணிக்கும் சக்தி இழந்து அந்த விஷத்தன்மைகளை சிறிதளவு தான் இப்போது மாற்றிக் கொண்டுள்ளது
2.விஷக் கதிர்கள் அதற்குள் தாக்கப்பட்டு நல்ல சக்திகளை உருவாக்கும் தகுதியை சூரியன் இழந்து கொண்டுள்ளது.
குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
இப்படி உலகின் நிலைகள் இன்று எத்தனையோ வளர்ந்து விட்டது வளர்ந்து கொண்டே உள்ளது சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது… தன்னம்பிக்கை இழக்கச் செய்யும் பக்தி மார்க்கங்கள் ஏராளமாக வந்துவிட்டது.
அரசர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ளது போன்று… மனிதனை மனிதனாக வாழ விடாது ஆசையின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவ்வழியிலேயே வாழ்வோம் என்று உருவாக்கப்பட்டு விட்டது.
தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைப்பட்டு அந்த நஞ்சை வளர்த்து நஞ்சு கொண்ட உணர்வின் அணுக்களாக மாற்றி மனிதனல்லாத உருவைப் பெறும் நிலையாக இன்று உருவாகிக் கொண்டுள்ளது. சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.இதிலிருந்து விடுபட குரு காட்டிய அருள் வழியில்
2.தெளிந்த மனம் கொண்டு ஒவ்வொருவரும் அருள் வழியில் வளர வேண்டும்.
அருள் ஒளியின் உணர்வை வளர்த்துக் கொண்டால்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து… அங்கே நிலை கொண்டு பேரண்ட அகண்ட உலகில் உருப் பெறும் உணர்வினை ஒளியாக மாற்றி… என்றும் பேரின்ப்ப் பெரு வாழ்வாகவும்… மரணமில்லாப் பெருவாழ்வாகவும் வாழ்ந்திடவும் முடியும்
1.இதை நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்
2.இந்த உடலை விட்டு அகன்றால் அடுத்து மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையே இருக்கக் கூடாது
அப்படி நிலை பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றார்கள்
1.அதனுடைய எல்லையை அடைவது தான்
2.நம்முடைய வாழ்க்கையின் லட்சியமாக இருத்தல் வேண்டும்.