துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்
இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனால்
அஞ்ஞான வாழ்க்கையே நாம் வாழ்கின்றோம்.
1.நமது வாழ்க்கையில் வரும் துன்பங்களை
எவ்வாறு நீக்குவது…?
2.மனிதனான பின் மகரிஷிகளின் அருள் உணர்வை
எப்படிப் பெருக்குவது…?
3.இந்த வாழ்க்கையில் தீமை இல்லாத வாழ்க்கை
எவ்வாறு வாழ்வது…? என்பதனை
4.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.
அதன்படி நாம் ஒவ்வொருவரும் காலையில் தவறாது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது
படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா
ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நம் உடலுக்குள் சேர்த்துக்
கொள்ள வேண்டும்,
திருமணமானவர்கள் கணவன் மனைவி இருவரும்
ஒருவருக்கொருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி இந்த உணர்வுகளைச்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வைக்
கவர்ந்து அந்த உயர்ந்த உணர்வைப் பெறக்கூடிய
தகுதி பெறுகின்றீர்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பதிவாக்கிக் கொண்டபின்
2.27 நட்சத்திரங்கள் சக்தியைப் பெற முடியும்.
அதாவது 27 நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று
தாக்கும் பொழுது மின்னலாகப் பாய்கின்றது. ஒளிக் கற்றைகள் பலவும்
பரவுகின்றது. துருவ நட்சத்திரம் இத்தகைய மின்னல்களை நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கிப் பழகியது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் முதலில் வளர்த்து வலுவாக்கிக்
கொண்ட பின்
1.அந்த மின்னலின்
உணர்வுகளை நாமும் அடக்கும் பழக்கம்
வந்து விட்டால்
2.மின்னல் வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து
3.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள்
மிகவும் வீரியமடைகின்றது.
4.அப்படி வீரியமடைந்தால் தீமையான உணர்வுகள்
உள்புகாது நம்மைப் பாதுகாக்கும்
நிலை வருகின்றது.
அந்த தீமையை நீக்கக் கூடிய அந்த
அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்து விட்டால்”
1.மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் உணர்வுகளை
எளிதில் நுகர்ந்து
2.நம் உடலுக்குள் அந்த ஒளிக் கற்றைகள் வரும் பொழுது தீமை வராது தடுக்கவும் இது உதவும்.
அத்தகைய வலுவான உணர்வை நமக்குள் உருவாக்கி விட்டால்… அது மீண்டும் தன்னிச்சையாக நல் மணங்களைக் கொண்டு வருவதும் தீமையிலிருந்து
விடுபடுவதுமாக அதை நம்மைச் செயலாக்கும்.