ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2024

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!

ஆத்மாவைச் சுகமாக வைத்துக் கொள்ளுங்களப்பா…!


கண்டெடுத்த இரசாயத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தை தானே காணும் நிலை அறிந்துள்ளீர்.ம்மாயக்கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம் தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அக்கண்ணாடியில் காண்கின்றார்கள்.
 
அன்றே கண்டான் அச்சித்தன் தன் கண்ணால் எல்லாமுமே…!
 
உலக நிலையையும் மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்…? என்று சிலர் எண்ணிடலாம்.
1.இப்பாட நிலைக்கு வந்தவர்களுக்கு
2.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான் இப்பாட நிலை.
 
மனித சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்திடவும்ப்பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்கு அளிக்கின்றாளோ பூமித்தாய் அந்நிலையான சக்தி எல்லாமே பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் அவ்ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன.
 
சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்து விடலாம்.
1.நம் உடலில் உள்ள பிணிக்கும் அச்சூரிய சக்தியிலிருந்து பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கும் நாம் ஈர்த்திடலாம்.
2.நம் செவிக்கு நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் கேட்பதைப் போல் நம் காணா இடத்தில் உள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.
 
நம் சக்தியில் நாம் எடுக்கும் சுவாசத்தில் அவ்ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டுவ்வொளியின் பிம்பம் படும் நிலையில் உள்ளவை எல்லாவற்றையுமே இருந்த நிலையிலையே கண்டிடலாம்.
 
இம்மனித சக்திக்குத் தான் கால நிலை பூகம்ப நிலை பெரும் மழை வரும் நிலை எல்லாவற்றையும் உணரும் தன்மை இவ் உடலில் இருக்கின்றது நம் நினைவை மாற்றி விடுவதினால் அதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.
 
பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல்
1.பூமியில் தித்த உயிரணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
2.மனித உடலில் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையும் அறிந்திடும் சக்தி உள்ளது.
3.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.
 
இம்மனிதன் உண்டு உடுத்தி உறங்குவது தான் சுக வாழ்க்கை என்று சுகத்தை எண்ணுகின்றான்.
 
ச்சுகம் எத்தனை நாளைக்கு…? தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல் இவ் உடல் சுகத்தைத் தான் எண்ணி வாழ்கின்றான்.
 
இவ் உடல் என்னும் கூட்டிற்கு அனைத்து சக்திகளையும் அறிந்தே வாழும் சக்தி உள்ளது… அதை ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்களப்பா…!