உணர்வின் ஒலிகளையும் அதனின் இயக்கங்களையும் குருநாதர் எனக்குக் காட்டிய விதம்
குருநாதர் எம்மைக் காட்டிற்குள்
அழைத்துச் செல்கின்றார் ஒரு மரத்தின் சக்தி எவ்வாறு இருக்கின்றது…? என்று
காட்டுகின்றார்.
ஆனால் அந்த மரத்தில் வாழும்
புழுக்கள் எப்படி இருக்கின்றது…? என்பதனைக் காட்டுவதற்காக மரத்தை உற்றுப்
பார்க்கும்படி சொல்கின்றார். ஒரு கையை அதன் மேல் வைத்து
உற்றுப் பார்க்கும்படி சொல்கின்றார்.
அவர் கையில் இருக்கக்கூடிய ஒரு
ஆயுதத்தை வைத்து மரத்தின் தாவை (மரத்தின் கொப்பு)
வெட்டுகின்றார். அந்தத் தாவு நிறைய புழுக்கள் உண்டு. அதில் இருக்கக்கூடிய சத்தை அது உணவாக
உட்கொள்கின்றது.
1.ஆனால்
வெட்டும் பொழுது அந்தப் புழுக்கள் கத்துகின்றது தன் இரை போய்விடுமே என்று…!
2.மரத்தின் கொப்பு கீழே முறிந்த பின் அதிலிருக்கக்கூடிய புழுக்கள் கத்தக்கூடிய
நிலையும் ஒன்றுடன் ஒன்று ஓலமிடக்கூடிய நிலையும்
3.அதன் உணர்வு
ஏங்கி வெட்டுபவரைப் பார்ப்பதையும் உற்று நோக்கும்படி செய்தார்.
உயிரணு தோன்றிய பின் புழுவாக உடல் பெற்ற நிலையில் தன் வாழ்க்கைக்கு எந்த மரத்தின் தழையை உணவாக உட்கொள்கின்றதோ அதை உற்று
நோக்கி அந்த உணர்வின் தன்மையைப் பார்க்கின்றது.
1.அதனுடைய
சப்தங்கள் பயங்கரமாக இருக்கின்றது…!
2.அதை பன்மடங்கு
பெருக்கி அதனுடைய ஒலிகளை எடுக்கும்படி செய்கின்றார்.
அதே சமயத்தில் மரத்தையும் உற்றுப்
பார்த்து கை வைத்துப் பார்க்கப்படும் பொழுது
1.மனிதனை
அடித்தால் எப்படி நாம் துடிக்கின்றோமோ
2.கை, கால் அங்கங்களை இழந்தால் எப்படி வேதனைப்படுகின்றோமோ
3.அதை வெட்டும்
பொழுது அதனுடைய சோர்வலைகள் எப்படி ஊடுருவுகின்றது…?
4.மரத்தின்
உணர்ச்சிகள் எவ்வாறு தடைப்படுகின்றது…? என்பதையும்
காட்டுகின்றார்.
அந்த மரம் தன் இலைகளின்
நுனிகளிலிருந்து தன் இனமான சத்தை… இதற்கு முன் தாய் மரம்
விளைய வைத்த சத்தினை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து
அலைகளாக மாற்றி இருப்பதைக் கவர்ந்து தான் உணவாக
உட்கொள்கின்றது. அதை வைத்துத் தான் அந்த மரம் வளர்கின்றது.
நமக்கு எப்படி மூட்டைப் பூச்சி
கடித்தாலோ கொசு கடித்தாலோ உணர்ச்சியின் தன்மை படுகின்றோமா இதைப் போல
1.இந்தப்
புழுக்கள் மரத்தின் இலை நுனிகளை உணவாக உட்கொள்ளும் பொழுது
2.அதைக் கடிக்க அந்த உணர்வின் தன்மை நெளிந்து கொடுப்பதும்
3.இதைப்போல
அதனின் உணர்வின் உணர்ச்சிகள் ஒரு விதமான ஓசைகளை எழுப்புகின்றது.
தாவு வெட்டிக் கீழே விழுந்த
பின் இதனுடைய துடிப்பும் மனிதன் ஒரு கையை இழந்தால் நாம் எப்படி வாடுகின்றோமோ
வேதனைப்படுகின்றோமோ “அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள்” அங்கே வருவதைக்
காட்டுகின்றார்.
இதையும் சூரியனுடைய காந்த
சக்தி கவர்ந்தால் அதை நாம் நுகர்ந்தால் அந்த மரம் வெட்டுண்ட நிலையைப் பார்க்கும் பொழுது “உங்கள் உணர்வுகளும் சோர்வடைவதைப்
பார்க்கலாம்…”
ஒரு மரத்தை வெட்டுகின்றீர்கள்
1.அதிலிருந்து
வரக்கூடிய உணர்வை நீங்கள் ஆனந்தமாகச் சுவாசித்தாலும்
2.வெட்டியபின்
உடலில் சோர்வின் தன்மை நிச்சயம் உணர முடியும் என்று இதைத் தெளிவாக்குகின்றார்.
வெப்பம் காந்தம் விஷம் என்ற
நிலையில் வரப்பப்படும் பொழுது எதன் உணர்வை அது கவர்ந்து கொள்கின்றதோ அந்த கவர்ந்து
கொண்ட உணர்வுகள் இந்தச் செடியின் தன்மை போகும் பொழுது இன்னொரு செடி அதைக்
கவருகின்றது.
ஈர்க்கும் சக்தி குறையப்படும்
பொழுது உணவு இல்லை என்றால் அதன் பகுதி எடுக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகள் என்ன…? என்ற நிலையைத்
தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
ஏனென்றால்
1.இயற்கையில்
எப்படி ஜீவன் கிடைத்தது…?
2.உணர்வுக்கொப்ப
உடல் எப்படி அமைந்தது…? என்பதை
3.காடுகளுக்கு
அழைத்துச் சென்று முதலில் இதைத்தான் குருநாதர் காட்டினார்.