ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2024

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”

பூமியில் மழை வருவதற்கு “மூலமே வியாழன் கோள் தான்”

 
சிறு பிராயம் முதல் கொண்டு பள்ளிகளில் போதிக்கும் முறையில் மழை எந்த நிலை கொண்டு வருகிறது…? என்று போதிக்கின்றார்கள்.
 
இம்மழையை நாம் பெறுவதற்கு நம்மைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையிலிருந்து மூலமாக உள்ளது வியாழன் மண்டலம் தான்…”
 
சூரியனிலிருந்து பாயும் ஒளிக் கதிர்களைக் கொண்டு
1.அவ்வியாழன் மண்டலம் ஒளிக்கதிரைத் தன்னுள் ஈர்த்து அது பாயும் தன்மையைக் கொண்டு (பூமி ஈர்க்கும் தன்மையைக் கொண்டு)
2.இப்பூமியின் மேல் அவ்வொளிக்கதிர்கள் பட்டு அப்பூமி ஈர்த்து அப்பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலைகள் வெளிப்படுவதைக் கொண்டு
3.புதன் மண்டலத்தில் இருந்து வரும் நாம் பெறும் காற்று மண்டலம் காற்று மண்டலம் என்னும் பொழுது
4.புதனிலிருந்து வரும் காற்றை அளிக்கும் அணுக்கதிர்கள் பூமியிலிருந்து கிளம்பும் உஷ்ண மண்டலத்தைக் குளிர விடும் தன்மையில்
5.அந்தந்த நிலைகளில் மேகங்கள் படர்ந்து உள்ள நிலையில்
6.அதன் மேல் செவ்வாய் மண்டலத்தினுடைய சப்த அலைகள் மோதும் பொழுது வருவதே மழை மேகங்கள் எல்லாமே…”
 
பூமியில் உள்ள மழை நிலை மற்ற மண்டலங்களில் மாறுபடுகின்றது. சந்திரனில் இந்நிலை கொண்ட பெரும் மழை இல்லை. ஈரப்பசை உண்டு மழை நிலை மாறுபடுகிறது.
 
பூமியின் நிலையை எண்ணிப் பார்த்தால் பல நிலைகளில் ஒரே மாதிரி இல்லாமல் மாறுபட்ட நிலைகளில் உள்ளதின் நிலையில் எப்படி உள்ளன…? என்று எண்ணிடலாம்.
 
சில இடங்களில் மாறுபட்ட உலோகத் தன்மையும் நேற்றைய பாடத்தில் சொன்னபடி பல நிலைகள் உள்ள நிலை எல்லாம் ஆரம்பக் காலத்தில் எப்படி வந்தன…?
 
இவ்வுலகம் இவ்அழியா உலகம் ஆரம்ப நிலையில் ஆரம்ப நிலை என்பது உலக ஆரம்ப நிலை அல்ல. கலி முடிந்து கல்கி வருகின்றது என்கின்றோம் அல்லவா.
 
அதைப்போல யுகம் என்று சொல்லும் வழியில் இவ்வுலகம் மாறுபட்டு வரும் தன்மை கொண்டு அந்த நிலையில் சூரியனிலிருந்தும் மற்ற மண்டலங்களில் இருந்தும் இப்பூமியின் மேல் வந்து தாக்கும் அணுக்கதிர்கள் எந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்த நிலை கொண்டே அந்தந்த நிலைகளில் உள்ளன நிலைகள் எல்லாம்.
 
மனிதனுக்கு மட்டும் இல்லையப்பா கரு தோன்றி வளரும் தன்மை. இவ் உலகுக்கே உள்ளது கரு நிலை. இவ்வுலகினில் சில நிலைகளில் பயிர்கள் வளராத நிலையிலும் உள்ளன சில இடங்களில் பூரித்து வளரும் தன்மையும் உள்ளது.
 
1.வளராத கல் வளராத வைரம் வளராத தங்கம் இப்படிப் பல நிலைகளைச் சொல்லிக் கேட்டிருக்கலாம்
2.அவ்வளராத இடத்தில் இப்பூமியின் தன்மை ஜீவனற்ற நிலையில் உள்ளது.
 
உயிரினங்களுக்கு மட்டும் ஜீவன் பெற்றுப் போகும் நிலை எப்படி உள்ளனவோ அதைப் போல் தான் இப்பூமியின் நிலைக்கும் உள்ளது.
 
இப்பூமியில் கடலில் உள்ள தண்ணீர் உப்பு உடையதாகவும் ஆற்றுப்படுகையின் தண்ணீர் சுவையுடன் உள்ளதாகவும் கடலின் அருகிலேயே உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீர் சுவை உள்ளதாகவும் கடலுக்கு வெகு தூரத்தில் உள்ள சில ஊர்களில் உள்ள கிணற்றின் தண்ணீர் உப்புக் கரிப்பதாகவும் உள்ளது.
 
இந்நிலை எல்லாம் எந்த நிலை கொண்டு வந்தன…?
 
சூரியனிலிருந்து வரும் பாயும் ஒளியைக் கொண்டு அந்தந்த இடத்தில் அப்படியே இந்நிலை பெறுவதல்ல.
 
இப்பூமி சுழலும் வேகத்தில் பூமித்தாய் தன்னுள் ஈர்த்துள்ள சக்தியைக் கொண்டு
1.பூமியின் உள்நிலையின் நிலை என்று முதலிலேயே உணர்த்தியுள்ளேன்.
2.அந்நிலை கொண்டு அதை ஈர்த்து அது வெளிக் கக்கும் நிலையைக் கொண்டு
3.அந்தந்த இடங்களில் உள்ள வடிகால்களின் மூலமாக அது வெளிப்படும் தன்மையில் வளர்வது தான்
4.மண்ணின் நிலையும் அம்மண்ணிற்குத் தகுந்த சுவையும் அத்தண்ணீரில் நமக்குக் கிட்டுகின்றது.