ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2024

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்

பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்டது தான் பத்தாவது நிலை அடையும் உடல்


இந்த மனித உடலில் நம்மை அறியாது தீமை என்ற உணர்வுகளை வளர்த்து விட்டால் அந்த அசுர குணங்கள் கொண்டு மற்றவர்களைத் தாக்கும் நிலையே வருகின்றது
 
1.இந்த உடலின் இச்சை கொண்டு
2.பாசத்தால் தனக்குள் வளர்க்கும் பல தீமைகளை உணர்ந்து அதிலிருந்து விடுபடும் நிலைகள் வந்தாலும்
3.அசுர உணர்வு கொண்டு அது விளைந்த பின் மற்றவர்களை அழித்திடும் உணர்வுகள் இங்கே வருகின்றது.
4.இதை இராமாயணத்தில் (பத்தாவது நிலை) அடையும் இராவணனாகக் காட்டுகின்றார்கள்.
 
தான் கற்றுணர்ந்தோம் என்ற நிலையில் சர்வத்தையும் அறியும் நிலையும் சர்வ இசைகளையும் கண்டுணர்ந்த அவன் அதன் வழி அவன் வளர்ச்சி வரும் பொழுது சர்வ கலா சக்திகளையும் பெற்றவன் இராவணன் பத்தாவது நிலை அடையக் கூடியவன்...!
 
உயிரோ தசரத சக்கரவர்த்தி…! பத்தாவது நிலை அடையும் இந்த உயிர் சக்கரவர்த்தியாக மாறுகின்றது என்ற நிலையும்
1.இந்தப் பத்தாவது நிலை அடையும் உயிரால் உருவாக்கப்பட்ட்து தான் பத்தாவது நிலை அடையும் உடல்.
2.இந்த உடலுக்கும் இந்த உயிருக்கும் உண்டான வித்தியாசத்தைத் தெளிவாக வான்மீகி காட்டுகின்றார் “நம்மை நாம் அறிவதற்காக..”
 
நமது உயிர் எத்தனையோ கோடிச் சரீரங்கள் நடந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சரீரத்திலும் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம் மனிதனான பின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் “இந்த மனித உடலைப் பெற்றோம்...! இந்தப் பிள்ளை யார்...?” என்று தன்னைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.
 
ஆனால் அதே சமயத்தில்
1.உயிரால் வளர்க்கப்பட்ட உணர்வுகள் ஒவ்வொன்றும் தன் உணர்வுக்கொப்ப உடலை அமைத்து
2.அந்த உணர்வுக்கொப்ப உடலைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து
3.அதிலே வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.
 
அவன் நிலைகளை நாம் எண்ணிப் பார்ப்பதற்குக் காவியத்தை அப்டிப் படைத்துக் காட்டுகின்றனர். அதாவது...
1.நஞ்சை வென்று விண்ணுலகம் சென்று உணர்வை ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்
2.அகஸ்தியன் துருவனாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி அருள் ஒளி பெற்று அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி ஒளியாக இன்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்
4.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று நம்மை எண்ணி ஏங்கும்படிச் செய்கின்றார்கள்.
 
அதை யாராவது நாம் இப்பொழுது எண்ணுகிறோமா...? என்றால் இல்லை.